832. தேனினுமினியர் பாலனநீற்றர்
தீங்கரும்பனையர்தந்
திருவடிதொழுவார்
ஊனயந்துருக வுவகைகடருவா
ருச்சிமேலுறைபவ ரொன்றலாதூரார்
வானகமிறந்து வையகம்வணங்க
வயங்கொளநிற்பதோர்
வடிவினையுடையார்
ஆனையினுரிவை போர்த்தவெம்மடிக
ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
2
____________________________________________________
டால் ஒத்த மார்பில், பூணூலும் பொடியும்
அணிந்து, உமாதேவியை ஒரு பாகத்துக்கொண்டு, ஆணுருவும்
பெண்ணுருவும் வேறாயுள்ள அடிகள் ஆவார் என்கின்றது.
குன்று இரண்டு அன்ன தோள் எனவும், அன்று இரண்டுருவம்
ஆய எனவும் பிரிக்க. கொழும் பொடி - வளப்பமான
விபூதி.
2. பொ-ரை: அச்சிறுபாக்கத்தை,
தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர்,
தேனினும் இனியவர். பால் போன்ற நீறணிந்தவர்.
இனிய கரும்பு போன்றவர். தம் திருவடிகளை மெய்யுருகி
வணங்கும் அன்பர்கட்கு உவகைகள் தருபவர்.
அவர்களின் தலைமேல் விளங்குபவர். இடபவாகனமாகிய
ஓர் ஊர்தியிலேயே வருபவர். வானுலகைக் கடந்து
மண்ணுலகை அடைந்து அங்குத் தம்மை வழிபடும்
அன்பர்கள் நினைக்கும் செயலை வெற்றி பெறச்
செய்து நிற்கும் வடிவினை உடையவர். யானையின்
தோலைப் போர்த்தியவர். அவர் எம் தலைவராவர்.
கு-ரை: அவர் திருவடி தொழுவார்க்குத்
தேனினும் இனியர், கரும்பனையர், உவகைகள் தருவார்,
விண்ணுலகினைக் கடந்தும், வையகம் வணங்க
நிற்பவர் என்கின்றது. தேனினும் இனியர் -
எக்காலத்தும் அள்ளூறிநின்று இனிக்கும் பொருளாக
இருத்தலின் நாப்புலனோடு ஒன்றியகணத்து இனித்துப்
பின் புளிப்பதாய தேனினும் இனியராயினர். பால்
அன்ன நீறு - பால் உண்டார்க்குப் பித்தநோய்
தணிக்கும்போல நீறு கண்டார்க்கும்,
பூசினார்க்கும் மலமயக்கம் போக்கலின் இங்ஙனம்
கூறினார். தீங்கரும்பனையர் - கரும்பு
பருவத்திற்கும் முயற்சிக்கும் ஏற்ப நுகரும்
முறையில் இனிப்பைக் கொடுக்கும்; இவரும்
ஆன்மாக்களின் பரிபக்குவநிலைக்கு ஏற்ப
இனிப்பர். ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் -
சடமாகிய மாயா காரியமாகிய உடல், உயிர் பெறும்
இவ்வின்பத்தைப் பெற்றிலமே
|