பக்கம் எண் :

 77. திருஅச்சிறுபாக்கம்859


834. மைம்மலர்க்கோதை மார்பினரெனவு

மலைமகளவளொடு மருவினரெனவும்

செம்மலர்ப்பிறையுஞ் சிறைபணிபுனலுஞ்

சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்

தம்மலரடியொன் றடியவர்பரவத்

தமிழ்ச்சொலும்வடசொலுந் தாணிழற்சேர

அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக

ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே. 4

835. விண்ணுலாமதியஞ் சூடினரெனவும்

விரிசடையுள்ளது வெள்ளநீரெனவும்

பண்ணுலாமறைகள் பாடினரெனவும்

பலபுகழல்லது பழியிலரெனவும்

____________________________________________________

4. பொ-ரை: அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் குவளை மலர்களால் இயன்ற மாலையைச் சூடிய மார்பினர் எனவும், மலைமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாகக் கொண்டுள்ளவர் எனவும், சிவந்த மலர் போலும் பிறையையும், தேங்கியுள்ள கங்கை நீரையும் தம் சடைமுடி மீது உடையவர் எனவும், எம் சென்னி மேல் உறைபவர் எனவும், தம் மலர் போன்ற திருவடிகளை மனத்தால் ஒன்றி நின்று அடியவர்கள் பரவவும் தமிழ்ச்சொல், வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம் திருவடிகளைச் சாரவும் அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவராய் விளங்கும் அடிகள் ஆவார்.

கு-ரை: அவர் அடியவர்கள் மாலை மார்பர் எனவும், மலை மகளை மருவினர் எனவும் கங்கையும் பிறையும் சூடிய சென்னியர் எனவும், எம் சென்னிமேல் உறைவார் எனவும் தோத்திரிக்க, தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் தம் திருவடியைச்சார இருக்கும் அடிகளாவர் என்கின்றது. மை மலர் - நீல மலர். கோதை - மாலை. செம்மலர்ப் பிறை - சிவந்த மலர்போலும் பிறை. தமிழ்ச்சொல்லும் வடச்சொல்லும் தாள் நிழல்சேர என்றது ஒலிவடிவாய சொற்கள் யாவும் இறைவனிடமிருந்தே தோன்றியனவாதலின் அடையுமிடமும் அவனடியேயாயிற்று என்பதாம்.

5. பொ-ரை: அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் வானிலே உலாவும் திங்களைச் சூடியவர் எனவும், அவர்தம் விரிந்த