எண்ணலாகாத விமையவர்நாளு
மேத்தரவங்களோ டெழில்பெறநின்ற
அண்ணலானூர்தி யேறுமெம்மடிக
ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
5
836. நீடிருஞ்சடைமே லிளம்பிறைதுலங்க
நிழறிகழ்மழுவொடு நீறுமெய்பூசித்
தோடொருகாதினிற் பெய்துவெய்தாய
சுடலையிலாடுவர் தோலுடையாகக்
காடரங்காகக் கங்குலும்பகலுங்
கழுதொடுபாரிடங் கைதொழுதேத்த
ஆடரவாட வாடுமெம்மடிக
ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
6
____________________________________________________
சடைமுடியில் கங்கை நீர் வெள்ளம்
தங்கி உள்ளது எனவும், இசை அமைதியோடு கூடிய நான்கு
வேதங்களைப் பாடியவர் எனவும், பலவகையான புகழையே
உடையவர் எனவும், பழியே இல்லாதவர் எனவும்
எண்ணற்ற தேவர்கள் நாள்தோறும் தம்மை ஏத்த
அரவாபரணங்களோடு, மிக்க அழகும் தலைமையும்
உடையவராய் ஆனேறு ஏறிவரும் எம் அடிகள் ஆவார்.
கு-ரை: அவர் பிறைசூடினர் எனவும்,
கங்கை அவர் சடைக் கண்ணதெனவும், மறைபாடினர்
எனவும், பழியிலர் எனவும் தேவர்கள் நாளும் ஏத்த
இருப்பவர் என்கின்றது. எண்ணலாகாத இமையவர் -
தாம் நுகரும் போக உள்ளத்தில் மயங்கி இறைவனைத்
தியானிக்காத தேவர்கள். கணக்கற்ற தேவர்கள்
என்பாரும் உளர்.
6. பொ-ரை: அச்சிறுபாக்கத்தில்
ஆட்சி கொண்டுள்ள இறைவர் தமது நீண்ட பெரிய
சடைமேல் இளம்பிறை விளங்க, ஒளிபொருந்திய
மழுவோடு, திருநீற்றை மேனிமேல் பூசி, ஒரு காதில்
தோடணிந்து கொடிய சுடலைக் காட்டில் ஆடுபவர்.
புலித்தோலை உடையாக அணிந்து இரவும், பகலும்
பேய்க்கணங்களும், பூதகணங்களும் கைகளால்
தொழுதேத்தப் படமெடுத்தாடும் பாம்புகள்தம்
மேனிமேல் பொருந்தி ஆடச் சுடுகாட்டைத் தமது
அரங்கமாகக் கொண்டு ஆடும் எம் அடிகள் ஆவார்.
கு-ரை: அவர் சடைமேல் பிறைவிளங்க,
நீறுபூசி ஒருகாதில்
|