பக்கம் எண் :

 77. திருஅச்சிறுபாக்கம்861


837. ஏறுமொன்றேறி நீறுமெய்பூசி

யிளங்கிளையரிவையொ டொருங்குடனாகிக்

கூறுமொன்றருளிக் கொன்றையந்தாருங்

குளிரிளமதியமுங் கூவிளமலரும்

நாறுமல்லிகையு மெருக்கொடுமுருக்கு

மகிழிளவன்னியு மிவைநலம்பகர

ஆறுமோர்சடைமே லணிந்தவெம்மடிக

ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே. 7

838. கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர்

கதிர்முடிசுடர்விடக் கவரியுங்குடையும்

பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய

பிறைநுதலவர்தமைப் பெரியவர்பேணப்

____________________________________________________

தோடணிந்து, பேயும் பூதமும் கைதொழுதேத்த, சுடலையில் ஆடுவர் என்கின்றது. நீடு இரும் சடை - நீண்ட பெரிய சடை. அரங்கு - கூத்தாடுமிடம். கங்குல் - இரவு. கழுது - பேய். பாரிடம் - பூதம்.

7. பொ-ரை: அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர், ஆனேறு ஒன்றில் ஏறித்தம் திருமேனிமேல் நீறுபூசி இளைய கிளி போன்ற அழகிய பார்வதி தேவியாருக்குத் தம் உடலில் ஒரு கூறு அருளி இருவரும் ஒருவராய் இணைந்து திருமுடிமேல் கொன்றை மாலை, குளிர்ந்த இளமதி, வில்வம், பிற நறுமலர்கள் மணங்கமழும் மல்லிகை, எருக்கு, முருக்கு, மகிழ், இளவன்னி இலை ஆகிய இவை மணம் பரப்ப, கங்கையாற்றைச் சடைமேல் அணிந்துள்ள எம் அடிகள் ஆவார்.

கு-ரை: அவர் எருதேறி, நீறுபூசி, பசுங்கிளி ஏந்திய பாவையோடு, கொன்றை, மதியம், வில்வம், மல்லிகை முதுலியவற்றைப் புனைந்தவர் என்கின்றது. இளங்கிளை அரிவை - இளைய கிளியையேந்திய உமாதேவி. கூவிள மலர் - வில்வப்பூ. பத்திரமே யன்றிப் பூவும் சூடப்பெறும் என்பதறிவிக்கப்பட்டது. மகிழ் - மகிழம்பூ.

8. பொ-ரை: அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர். ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை,