பக்கம் எண் :

862திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


பச்சமும்வலியுங் கருதியவரக்கன்

பருவரையெடுத்ததிண் டோள்களையடர்வித்

தச்சமுமருளுங் கொடுத்தவெம்மடிக

ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே. 8

839. நோற்றலாரேனும் வேட்டலாரேனு

நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக்

கூற்றலாரேனு மின்னவாறென்று

மெய்தலாகாததொ ரியல்பினையுடையார்

தோற்றலார்மாலு நான்முகமுடைய

தோன்றலுமடியொடு முடியுறத்தங்கள்

ஆற்றலாற்காணா ராயவெம்மடிக

ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே. 9

___________________________________________________

பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற் சூடி விளங்குபவர். பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித் தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார்.

கு-ரை: அவர், இராவணனுக்கு அச்சமும் அருளும் அளித்தவர் என்கின்றது. இராவணனுக்கு வந்த ஏற்றமெல்லாம் கச்சையும் வாளையுங்கட்டி, கவரி குடை பிச்சம் முதலியவற்றைத் தாங்கிய பெண்கள் இவனைப் பெரியவன் என்று பேணியதேயாகும். அதனால் இவனுக்கு அன்பும் வலிமையும் உண்டாயின என்ற கருத்து விளக்கப்படுதல் காண்க. அதனாலேயே ஏமாந்து இறைவன் கயிலையை எடுக்கத் தொடங்கினான் என்பதாம்.

9. பொ-ரை: அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர் தவம் செய்யாராயினும், அன்பு செய்யாராயினும் நுகரத்தக்க உணவு, சந்தனம், கையில் ஏந்திய மாலை இவற்றின் கூறுகளோடு வழிபாடு செய்யாராயினும் இத்தகையவர் என்று அறிய முடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்ற