பக்கம் எண் :

 78. திருஇடைச்சுரம்863


840. வாதுசெய்சமணுஞ் சாக்கியப்பேய்க

ணல்வினைநீக்கிய வல்வினையாளர்

ஓதியுங்கேட்டு முணர்வினையிலாதா

ருள்கலாகாததோ ரியல்பினையுடையார்

வேதமும்வேத நெறிகளுமாகி

விமலவேடத்தொடு கமலமாமதிபோல்

ஆதியுமீறு மாயவெம்மடிக

ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே. 10

____________________________________________________

எம்அடிகள் ஆவார். எனவே நோற்பவருக்கும் அன்பு செய்பவருக்கும் வழிபடுவோருக்கும் அவர் எளியர் என்பது கருத்து.

கு-ரை: அவர் தவஞ்செய்யாராயினும் சாந்தும் மாலையுங் கொண்டு தொழாராயினும், என்றைக்கும் இப்படி அடையலாமென்று முயன்றும் அடையமுடியாத தன்மையையுடையவர் இவர் என்கின்றது. நோற்றலார் - தவஞ்செய்யாதவர். வேட்டலார் - யாகஞ் செய்யாதவர்கள். புகர் - உணவு. ஈண்டு - நைவேத்தியம். தோற்றலார் மால் - பிறத்தலையுடைய திருமால்.

10. பொ-ரை: அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள எம் அடிகள் நல்வினைகளைச் செய்யாது வல்வினைகள் புரிபவரும் ஓதியும் கேட்டும் திருந்தாத உணர்வோடு தர்க்கவாதம் புரிபவருமாகிய சமணர்களும் சாக்கியப் பேய்களும் நினைத்தும் அறிய முடியாத இயல்பினை உடையவர். வேதமும் வேத நெறிகளும் ஆகியவர். தம்மை வழிபடுவார் மலங்களை நீக்கும் வேடம் உடையவர். தாமரை மலரும் திங்களும் போன்ற அழகும், தண்மையும் உடையவர். உலகின் முதலும் முடிவும் ஆனவர்.

கு-ரை: அவர் புறச்சமயிகளுடைய நல்வினையைப் போக்கியவர், படித்துங் கேட்டும் உணர்ச்சியற்றவர்களால் தியானிக்கப்படாதவர், வேதமும் அவைகூறும் நெறிகளுமாகி, மலரகிதரான வேடத்தோடு, ஆதியும் ஈறுமாய அடிகள் இவர் என்கின்றது. வாது செய் சமண் - விதண்டாவாதமே செய்து பொழுதுபோக்கும் சமணர். அவர்களுக்குத் துணை இருப்பது உலகபோகத்திற்குரிய நல்வினை யாதலின் உண்மை உணராது வாதமே செய்து காலம் கழிக்கின்றனர் என்பதாம். ஆதலால் அவர்களுடைய நல்வினையை நீக்கவேண்டியது இவர் அருளித் திறமாயிற்று.