பக்கம் எண் :

866திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


843. ஆற்றையுமேற்றதோ ரவிர்சடையுடைய

ரழகினையருளுவர் குழகலதறியார்

கூற்றுயிர்செகுப்பதோர் கொடுமையையுடையர்

நடுவிருளாடுவர் கொன்றையந்தாரார்

சேற்றயன்மிளிர்வன கயலிளவாளை

செருச்செயவோர்ப்பன செம்முகமந்தி

ஏற்றையொடுழிதரு மெழிறிகழ்சார

லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே. 2

____________________________________________________

காலின்கண் வெற்றி பெறச் சூடிச் சுடுகாட்டைத் தமது அரங்காகக் கொண்டு ஆடும் இவ்விறைவரது இயல்பு யாதோ?

கு-ரை: இப்பதிகம், இறைவனுடைய வீரம் முதலிய பல இயல்புகளை எடுத்துக்கூறி, இடைச்சுரம் மேவிய இவர் வண்ணம் என்னே என்று வினாவுவதாக அமைந்துள்ளது.

வரிவளர் அவிர் ஒளி அரவு - வரிகளோடுகூடி விளங்குகின்ற ஒளியினையுடைய பாம்பு. அரைதாழ - திருவரையில் தங்க. கரிவளர் தரு கழல் - அத்தியாளியின் உருவம் எழுதப்பெற்ற வீரக்கழல். இவர் இயல்புகளை எத்துணை அறியினும், அறிந்தவற்றிற்கும் அப்பால் பல இயல்புகள் இருத்தலின் இவர்வண்ணம் என்னே எனச் செயலறவு அருளினாராயிற்று.

2. பொ-ரை: வயல்களில் உள்ள சேற்றில் விளங்கும் கயல் மீன்களும் வாளை மீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் சிவந்த முகத்தையுடைய பெண் குரங்கோடு ஆண் குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச் சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், கங்கை நதியையும் ஏற்றருளிய விரிந்த சடையை உடையவராய் அழகும் இளமையும் உடையவராய், கூற்றுவன் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராய், நள்ளிருளில் திருநடம்புரிபவராய், கொன்றை மலர் மாலை சூடியவராய் விளங்கும் இவ்விறைவர்தம் இயல்பு யாதோ?

கு-ரை: ஆறு - கங்கை. குழகு - இளமை. கயல்மீனும் இளவாளைமீனும் போர்செய்ய, அதனைப் பெண் குரங்குகள் கூர்ந்து நோக்குகின்றன. செம்முக மந்தி - பெண் குரங்கு. ஏற்றை - ஆண் குரங்கு.