844. கானமுஞ்சுடலையுங் கற்படுநிலனுங்
காதலர்தீதிலர் கனன்மழுவாளர்
வானமுநிலமையு மிருமையுமானர்
வணங்கவுமிணங்கவும்
வாழ்த்தவும்படுவார்
நானமும்புகையொளி விரையொடுகமழ
நளிர்பொழிலிளமஞ்ஞை
மன்னியபாங்கர்
ஏனமும்பிணையலு மெழிறிகழ்சார
லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே. 3
845. கடமணிமார்பினர்
கடறனிலுறைவார்
காதலர்தீதிலர் கனன்மழுவாளர்
விடமணிமிடறினர்
மிளிர்வதோரரவர்
வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர்
வடமுலையயலன கருங்குருந்தேறி
வாழையின்றீங்கனி
வார்ந்துதேனட்டும்
இடைமுலையரிவைய ரெழிறிகழ்சார
லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே. 4
____________________________________________________
3. பொ-ரை: தூவி எரிக்கும் புழுகு,
சந்தனம், அகில் முதலியவற்றின் புகையும் அவை
எரிதலால் விளங்கும் ஒளியும் மணம் வீசச்
செறிந்த பொழில்களிடையே இளமயில்கள்
நிறைந்துள்ளதும், அருகில் பன்றிகளும்
மானினங்களும் வாழ்வதுமான அழகிய மலைச் சாரலை
அடுத்துள்ள திருஇடைச்சுரத்தில் காட்டையும்,
சுடலையையும், கற்கள் நிரம்பிய மலையிடங்களையும்
விரும்புபவரும், தீமை யில்லாதவரும், அழல் போன்ற
வெம்மையான மழுவாயுதத்தை ஏந்தியவரும்,
தீமையில்லாதவரும், மறுமை இம்மை ஆகிய இருமை
இன்பங்களையும் தருபவரும் வணங்குதற்கும்
பழகுதற்கும் வாழ்த்துதற்கும் உரிமையானவருமாகிய
இவ்விறைவரின் இயல்பு யாதோ?
கு-ரை: கானம் - காடு. கற்படுநிலன் -
மலை. காதலர் - இவற்றை இடமாகக் கொள்ளும்
விருப்பினர். வானம் - மறுமை. நிலமை - இம்மை.
இருமையும் - இவ்விரண்டின் தன்மையும். நானம் -
கஸ்தூரி. ஏனம் - பன்றி. பிணையல் - பெண்மான்.
4. பொ-ரை: அசையும்
ஆலமரத்தினருகே விளங்கும் கரிய குருந்த மரங்களில்
ஏறி வாழைக் கனிகளின்மீது ஒழுகுமாறு தேன்
|