846. கார்கொண்டகடிகமழ்
விரிமலர்க்கொன்றைக்
கண்ணியர்வளர்மதி
கதிர்விடக்கங்கை
நீர்கொண்டசடையினர்
விடையுயர்கொடியர்
நிழறிகழ்மழுவின ரழறிகழ்நிறத்தர்
சீர்கொண்டமென்சிறை
வண்டுபண்செய்யும்
செழும்புனலனையன செங்குலைவாழை
ஏர்கொண்டபலவினொ டெழிறிகழ்சார
லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே. 5
____________________________________________________
அடைகளை எடுத்துப் பிழியும்,
இடங்கொண்டு வளர்ந்த முலைகளை உடைய பெண்கள்
வாழும் அழகிய மலைச்சாரலை உடைய
திருஇடைச்சுரத்தில், மலைச்சாரல்களில் விளைந்த
மணிகளை அணிந்த மார்பினரும் கடலில் உறைபவரும்,
அன்புடையவரும் தீமையில்லாத வரும், கனலும் மழுவை
ஏந்தியவரும் விடத்தை அடக்கிய மணிமிடற்றினரும்,
பாம்பை அணிகலனாகப் பூண்டவரும் வேறு வேறான ஒழுக்க
நெறிகளை உடையவரும் பல்வேறு தோற்றங்களையுடைய
வருமாய் எழுந்தருளிய இவ்விறைவரின் இயல்பு யாதோ?
கு-ரை: கடமணி - மலைச்சாரலில்
விளைந்த மணி. சரிதை - ஒழுக்கம். வட முலை அயலன -
அசையும் ஆலுக்குப் பக்கத்தனவாகிய. கருங்குருந்து -
பெரிய குருந்தமரத்தில். வார்ந்து - ஒழுகி. தேன்
அட்டும் - தேனை எடுக்கின்ற. இட முலை அரிவையர் -
இடங்கொண்டு வளர்ந்த முலையினையுடைய பெண்கள்.
5. பொ-ரை: கார்காலத்தே
உண்டான மணம் கமழும் விரிந்த கொன்றை
மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவரும்,
வளரும் பிறைமதி ஒளிவிடக் கங்கை நீரை ஏற்ற
சடையினரும், விடை எழுதிய உயர்ந்த கொடியை
உடையவரும், ஒளி விளங்கும் மழுப்படையை
ஏந்தியவரும், அழல்போலும் சிவந்த நிறத்தினரும்
ஆய், சிறப்புமிக்க மெல்லிய இறகுகளை உடைய
வண்டுகள் இசை பாடுவதும் வளவிய புனல் போலும்
தண்ணிய செவ்வாழைக் குலைகள் அழகுமிக்க
பலாக்கனிகளோடு விளங்கி அழகு செய்வதும் ஆகிய
சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியிருக்கும்
இவரது தன்மை யாதோ?
கு-ரை: கார்கொண்ட - கார்காலத்து
உண்டான. கடி - மணம். வாழைகள் பலாவினோடு
அழகைச்செய்கின்ற சாரல் எனக் கூட்டுக.
|