பக்கம் எண் :

 78. திருஇடைச்சுரம்869


847. தோடணிகுழையினர் சுண்ணவெண்ணீற்றர்

சுடலையினாடுவர் தோலுடையாகப்

பீடுயர்செய்ததோர் பெருமையையுடையர்

பேயுடனாடுவர் பெரியவர்பெருமான்

கோடல்களொழுகுவ முழுகுவதும்பி

குரவமுமரவமு மன்னியபாங்கர்

ஏடவிழ்புதுமலர் கடிகமழ்சார

லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே. 6

848. கழன்மல்குகாலினர் வேலினர்நூலர்

கவர்தலையரவொடு கண்டியும்பூண்பர்

அழன்மல்குமெரியொடு மணிமழுவேந்தி

யாடுவர்பாடுவ ராரணங்குடையர்

____________________________________________________

6. பொ-ரை: தோடணிந்த காதினராய்த் திருவெண்ணீறாகிய சுண்ணப் பொடி பூசியவரும், தோலை உடுத்திச் சுடுகாட்டில் நடனம் ஆடுபவரும், பீடு என்னும் சொல் பெருமை உறுமாறு மிக்க பெருமையை உடையவரும் பேய்க் கணங்களோடு ஆடுபவரும், பெரியவர் எனப் போற்றத் தக்கவர்கட்குத் தலைவருமாய்ச் செங்காந்தட் பூக்கள் தேனைச் சொரிய அவற்றின்கண் முழுகும் வண்டுகளை உடையதும் குரவம் கடம்ப மரம் ஆகியன நிறைந்துள்ள சோலைகளில் பூத்த புதுமலர்களின் மணம் வீசப் பெறுவதுமாகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபிரானது இயல்பு யாதோ?

கு-ரை: குழை - காது. பீடு - பெருமை. கோடல்கள் ஓழுகுவ - செங்காந்தட்பூக்கள் தேனைச் சொரிவன; அதில், தும்பி முழுகுகின்றன. தும்பி - வண்டு.

7. பொ-ரை: வீரக்கழல் அணிந்த திருவடியினரும், கையில் வேலை ஏந்தியவரும், முப்புரிநூல் அணிந்தவரும் ஐந்தாகக் கிளைத்த தலைகளை உடைய பாம்போடு உருத்திராக்க மாலை அணிந்துள்ளவரும், சுவாலைவிட்ட எரியோடு அழகிய மழுவை ஏந்தி ஆடுபவரும், பாடுபவரும், பிறரை வருத்தும் அழகுடையவருமாய்ப் பொழில்களில் நிறைந்து உயர்ந்துள்ள மராமரங்களில் பொருந்திய கிளைகளில் ஆண்பெண் குயில்கள் இணைந்து பாடுவதும் அழகிய