பக்கம் எண் :

870திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


பொழின்மல்குநீடிய மரவமுமரவ

மன்னியகவட்டிடைப் புணர்குயிலாலும்

எழின்மல்குசோலையில் வண்டிசைபாடு

மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே. 7

849. தேங்கமழ்கொன்றையந் திருமலர்புனைவார்

திகழ்தருசடைமிசைத் திங்களுஞ்சூடி

வீந்தவர்சுடலைவெண் ணீறுமெய்பூசி

வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர்

சாந்தமுமகிலொடு முகில்பொதிந்தலம்பித்

தவழ்கனமணியொடு மிகுபளிங்கிடறி

ஏந்துவெள்ளருவிக ளெழிறிகழ்சார

லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே. 8

____________________________________________________

சோலைகளில் வண்டுகள் இசை பாடுவதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் சிவபிரானது இயல்பு யாதோ?

கு-ரை: கழல் - வீரக்கழல். வேல் - சூலம். கவர் தலை அரவு - ஐந்தலை நாகம். கண்டி - உருத்திராக்கம். அணங்கு - தெய்வத் தன்மை. மரவம் - மராமரம். கவடு - கிளை.

8. பொ-ரை: தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலர் மாலையைச் சூடுபவரும், விளங்கும் சடைமுடியில் பிறை மதியைச் சூடி இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டுச் சாம்பலைத் தம் திருமேனி மீது பூசி, வேறுபடும் புராண வரலாறுகளை உடையவரும் அவ்வாறே வேறுபடும் பல வேடங்களுடன் காட்சி தருபவருமாய், சந்தனம் அகில் ஆகியவற்றின் மணம் பொதிந்து இடித்துப் பொழியும் மழையாள் உருண்டுவரும் பெரிய மணிகளையும் பளிங்குகளையும் அடித்து வருவனவாகிய உயர்ந்த வெண்மையான அருவிகள் விளங்கும் மலைச் சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் பெருமானது இயல்பு யாதோ?

கு-ரை: வீந்தவர் - இறந்தவர். சாந்தம் - சந்தனம். கனமணி - கூட்டமாகிய இரத்தினங்கள். ஏந்து - தாங்கிய