பக்கம் எண் :

 79. திருக்கழுமலம்871


850. பலவிலமிடுபலி கையிலொன்றேற்பர்

பலபுகழல்லது பழியிலர்தாமும்

தலையிலங்கவிரொளி நெடுமுடியரக்கன்

றடக்கைகளடர்த்ததோர் தன்மையையுடையர்

மலையிலங்கருவிகண் மணமுழவதிர

மழைதவழிளமஞ்ஞை மல்கியசாரல்

இலையிலவங்கமு மேலமுங்கமழு

மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே. 9

851. பெருமைகடருக்கியோர் பேதுறுகின்ற

பெருங்கடல்வண்ணனும் பிரமனுமோரா

அருமையரடிநிழல் பரவிநின்றேத்து

மன்புடையடியவர்க் கணியருமாவர்

கருமைகொள்வடிவொடு சுனைவளர்குவளைக்

கயலினம்வயலிள வாளைகளிரிய

எருமைகள்படிதர விளவனமாலு

மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே. 10

____________________________________________________

9. பொ-ரை: பலர் இல்லங்களுக்கும் சென்று மகளிர் இடும் உணவைக் கைகளில் ஏற்பவரும், பலவாய் விரிந்த புகழ் அல்லது பழி எதுவும் இல்லாதவரும், விட்டு விளங்கும் ஒளியை உடைய நீண்ட மகுடங்களைத் தரித்த பத்துத் தலைகளையுடைய இராவணனின் நீண்ட கைகளை நெரித்த வலிமையை உடையவருமாய், மலையில் விளங்கும் அருவிகள் மணமுழாப் போல் ஒலியோடு இழிவதும், இளமயில்கள் நிறைந்ததும், மேகங்கள் தவழும் சாரலை உடையதும், இலைகளை உடைய இலவங்கம் ஏலம் கமழ்வதுமான திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய இப்பெருமானது இயல்பு யாதோ?

கு-ரை: பல இலம் இடு பலி - பல வீடுகளில் இட்ட பிச்சை. தலை இலங்கு நெடு முடி எனக் கூட்டுக. இலை இலவங்கம் - இலைகளோடு கூடிய இலவங்கமரம்.

10. பொ-ரை: பெருமைகளால் செருக்குற்றுப் பேதைமை உறுகின்ற கடல் நிற வண்ணனாகிய திருமாலும் பிரமனும் அறிய முடியாத அருமையை உடையவரும், தம் திருவடி நிழலை நின்று