பக்கம் எண் :

872திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


852. மடைச்சுரமறிவன வாளையுங்கயலு

மருவியவயறனில் வருபுனற்காழிச்

சடைச்சுரத்துறைவதோர் பிறையுடையண்ணல்

சரிதைகள்பரவிநின் றுருகுசம்பந்தன்

புடைச்சுரத்தருவரைப் பூக்கமழ்சாரற்

புணர்மடநடையவர் புடையிடையார்ந்த

இடைச்சுரமேத்திய விசையொடுபாட

லிவைசொலவல்லவர் பிணியிலர்தாமே. 11

திருச்சிற்றம்பலம்.

____________________________________________________

பரவிப் போற்றும் அன்புடைய அடியவர்கட்கு அணிமையானவருமாய், சுனைகளில் கரிய நிறவடிவோடு பூத்து வளர்ந்த குவளை மலர்களையும் கயலினங்களையும் உடையதும் வயல்களில் வாளைமீன்களும் கயல் மீன்களும் அஞ்சித் துள்ளுமாறு எருமைகள் படிய அதனைக் கண்டு இளைய அன்னங்கள் ஆரவாரிப்பதுமாகிய திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய சிவபிரானாராகிய இவர்தம் இயல்பு யாதோ?

கு-ரை: பெருமைகள் தருக்கி - பெருமைகளால் செருக்குற்று. பேதுறுகின்ற - மயங்கிய. ஓரா அருமையர் - அறியமுடியாத அருமைப்பாட்டினை உடையவர். எருமைகள் குவளை கயலினம் இளவாளைகள் இரிய படிதர இள அன்னம் ஆலும் இடைச்சுரம் எனக் கூட்டுக. இரிய - விலக. படிதர - தோய. ஆலும் - ஒலிக்கும்.

11. பொ-ரை: நீர் மடைகளில் துள்ளுவனவாகிய வாளை மீன்களும் கயல் மீன்களும் வயல்களிடத்து வரும் நீர் வளம் மிக்க காழி நகரில், சடைக்காட்டில் உறையும் பிறை மதியை உடைய சிவபிரானின் வரலாறுகளைப் பரவி உருகும் ஞானசம்பந்தன், அருகருகே வெற்றிடங்களை உடைய மலையின் பூக்கமழ் சாரலில் அழகிய மட நடையினை உடைய மகளிர் பல இடங்களில் தங்கி அழகு செய்வதாகிய இடைச்சுரத்தைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடலை இசையோடு சொல்ல வல்லவர், பிணிகள் இன்றி வாழ்வர்.

கு-ரை: ஞானசம்பந்தன், இடைச்சுரத்தைத் துதித்த பாடலை, இசையோடு சொல்ல வல்லவர் பிணியிலர் என்கின்றது. மடைச்சுரம் - நீர் மடைகளின் வழி. மறிவன - மடங்கித் துள்ளுவன. சடைச்சுரத்து - சடைக்காட்டில்.