பக்கம் எண் :

 79. திருக்கழுமலம்873


79. திருக்கழுமலம்

பண்: குறிஞ்சி

பதிக எண்: 79

திருச்சிற்றம்பலம்

853. அயிலுறுபடையினர் விடையினர்முடிமே

லரவமுமதியமும் விரவியவழகர்

மயிலுறுசாயல் வனமுலையொருபான்

மகிழ்பவர்வானிடை முகில்புல்குமிடறர்

பயில்வுறுசரிதைய ரெருதுகந்தேறிப்

பாடியுமாடியும் பலிகொள்வர்வலிசேர்

கயிலையும்பொதியிலு மிடமெனவுடையார்

கழுமலநினையநம் வினைகரிசறுமே. 1

____________________________________________________

1. பொ-ரை: கூர்மை பொருந்திய சூலப் படையை உடையவரும், விடை ஊர்தியினரும், முடிமேல் அரவு மதி ஆகியன விரவிய அழகுடையவரும், ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையையும், அழகிய தனபாரங்களையும் உடைய உமையம்மையை ஒரு பாலாகக் கொண்டு மகிழ்பவரும், வானகத்தே பொருந்திய மேகம் போன்ற கரிய மிடற்றினரும், எல்லோராலும் போற்றப்படும் புராண வரலாறுகளை உடையவரும், இடபத்தில் மகிழ்ந்தேறிப் பாடியும் ஆடியும் சென்று பலியேற்பவரும், வலிமை சேர்ந்த கயிலை, பொதியில் போன்ற அழகிய மலைகளைத் தம் இடங்களாக உடையவரும் ஆகிய சிவபெருமான் உறையும் கழுமலத்தை நினைய நம்வினைத் தீமை அறும்.

கு-ரை: இப்பதிகம் இறைவனது கழுமலத்தை நினைய, நமது வினையின் தீமை அறும் என்கின்றது.

அயில் - கூர்மை. மயில் உரு சாயல் - மயில் போன்ற சாயலை உடைய. வனமுலை - இளைய முலையினையுடையாளாகிய உமா தேவி. முகில் புல்கும் மிடறர் - மேகத்தையொத்த கண்டத்தையுடையவர். கரிசு - தீமை.