854. கொண்டலுநீலமும் புரைதிருமிடறர்
கொடுமுடியுறைபவர் படுதலைக்கையர்
பண்டலரயன்சிர
மரிந்தவர்பொருந்தும்
படர்சடையடிகளார் பதியதனயலே
வண்டலும்வங்கமுஞ் சங்கமுஞ்சுறவு
மறிகட ற்றிரைகொணர்ந்
தெற்றியகரைமேற்
கண்டலுங்கைதையு நெய்தலுங்குலவுங்
கழுமலநினையநம் வினைகரிசறுமே. 2
855. எண்ணிடையொன்றின ரிரண்டினருருவ
மெரியிடைமூன்றினர் நான்மறையாளர்
மண்ணிடையைந்தின ராறினரங்கம்
வகுத்தனரேழிசை யெட்டிருங்கலைசேர்
____________________________________________________
2. பொ-ரை: மேகம் நீல மலர் ஆகியன
போன்ற அழகிய மிடற்றை உடையவரும், கயிலைச்
சிகரத்தில் உறைபவரும், உயிரற்ற தலையோட்டைக்
கையில் ஏந்தியவரும், முற்காலத்தில் தாமரை மலர்
மேல் உறையும் பிரமனின் தலைகளில் ஒன்றைக்
கொய்தவரும், அழகுறப் பொருந்தும் விரிந்த
சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானதுபதி,
பக்கலின் சுருண்டு விழும் கடல் அலைகள் வண்டல்
மண், இலவங்கம், சங்குகள் சுறா ஆகியனவற்றைக்
கொணர்ந்து வீசும் கரை மேல் நீர்முள்ளி தாழை
நெய்தல் ஆகியன பூத்து விளங்கும் கழுமல நகராகும்.
அதனை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.
கு-ரை: கொண்டல் - மேகம். மேகம்
மிடற்றிற்கு உவமையானது தேவர்களைக்
காத்தமையால். நீலம் ஒப்பானது கண்ணுக்கு
இனிமையாய் இருத்தலின். படுதலை - கபாலம். வண்டல் -
ஒதுக்கிய மண். வங்கம் - தோணி. கண்டல் -
நீர்முள்ளி. கைதை - தாழை. நெய்தல் - நெய்தற்பூ.
3. பொ-ரை : எண்ணத்தில்
ஒன்றாயிருப்பவர், சிவம் சக்தி என உருவத்தால்
இரண்டாயிருப்பவர். நெருப்பில் மூன்றாயிருப்பவர்.
நான்கு மறைகளை அருளியவர். மண்ணிடைச் சுவை ஒளி,
ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து தன்மையர்.
வேதத்தின் ஆறு அங்கங்களாக இருப்பவர். ஏழிசைகளை
வகுத்தவர். எண்வகைக் கலைகளில்
|