பக்கம் எண் :

 79. திருக்கழுமலம்875


பண்ணிடையொன்பது முணர்ந்தவர்பத்தர்

பாடிநின்றடிதொழ மதனனைவெகுண்ட

கண்ணிடைக்கனலினர் கருதியகோயில்

கழுமலநினையநம் வினைகரிசறுமே. 3

856. எரியொருகரத்தின ரிமையவர்க்கிறைவ

ரேறுகந்தேறுவர் நீறுமெய்பூசித்

திரிதருமியல்பின ரயலவர்புரங்க

டீயெழவிழித்தனர் வேய்புரைதோளி

வரிதருகண்ணிணை மடவரலஞ்ச

மஞ்சுறநிமிர்ந்ததோர் வடிவொடும்வந்த

கரியுரிமருவிய வடிகளுக்கிடமாங்

கழுமலநினையநம் வினைகரிசறுமே. 4

____________________________________________________

ஒன்றாய இசைத்துறையில் ஒன்பான் கலையையும் உணர்ந்தவர். பக்தர்கள் பாடி நின்று திருவடிகளை வணங்க வீற்றிருப்பவர். மன்மதனைக் கண்ணிடைத் தோன்றிய கனலால் வெகுண்டவர். அத்தகைய பெருமான் விரும்பி உறையும் கழுமலத்திலுள்ள கோயிலை நினைய நம் வினைகளின் தீமை முற்றிலும் நீங்கும்.

கு-ரை: எண்ணிடை ஒன்றினர் - எண்ணத்தில் அருவாயிருக்கும் பொழுது ஒன்றாய் இருப்பவர். உருவம் இரண்டினர் - சிவமும் சத்தியுமாகி உருவத் திருமேனி கொள்ளுங்காலத்து இரண்டாய் இருப்பவர். எரியிடை மூன்றினர் - நெருப்பில் சத்தமும் ஸ்பரிசமும் உருவமுமாகிய மூன்று தன்மாத்திரைகளாய் இருப்பவர். ஆகவனீயம் முதலிய முத்தீயாய் இருப்பவர் என்றலுமாம். மண்ணிடை ஐந்தினர் - மண்ணில் சத்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகளாய் இருப்பவர். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணையாய் இருப்பவர் எனலுமாம் ஏழிசை - குரல், கைக்கிளை, துத்தம், இழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழு. எட்டிருங்கலை - அஷ்டவித்தை.

4. பொ-ரை: ஒருகரத்தில் எரி ஏந்தியவர். தேவர்கட்குத் தலைவர். விடையை விரும்பி ஊர்பவர். திருநீற்றை மெய்யிற் பூசித் திரியும் இயல்பினர். பகைமை பூண்டவர்களாய அசுரர்களின் மூன்று புரங்களும் தீயில் அழியுமாறு விழித்தவர். மூங்கில் போன்ற திரண்ட