857. ஊரெதிர்ந்திடுபலி தலைகலனாக
வுண்பவர்விண்பொலிந்
திலங்கியவுருவர்
பாரெதிர்ந்தடிதொழ
விரைதருமார்பிற்
படவரவாமையக்
கணிந்தவர்க்கிடமாம்
நீரெதிர்ந்திழிமணி நித்திலமுத்த
நிரைசுரிசங்கமொ
டொண்மணிவரன்றிக்
காரெதிர்ந்தோதம்வன்
றிரைகரைக்கெற்றுங்
கழுமலநினையநம் வினைகரிசறுமே. 5
____________________________________________________
தோள்களையும், வரி பரந்த கண்களையும்
உடைய உமையம்மை அஞ்சுமாறு மேகம் திரண்டு
நிமிர்ந்து வந்தாற் போன்ற கரிய வடிவோடு
தம்பால் வந்த யானையின் தோலை உரித்து அதனை
அணிந்தவர். அத்தகைய பெருமானுக்கு இடமாக
விளங்கும் கழுமலத்தை நினைய நம் வினைத்தீமை
நீங்கும்.
கு-ரை: எரி - மழு. அயலவர் - பகைவர்.
தீ யெழ விழித்தனர் என முப்புரங்களை
விழித்தெரித்ததாகக் கூறப்படுகிறது. வேய் -
மூங்கில். வரி - செவ்வரி. மடவரல் - உமாதேவி. மஞ்சு
- ஆகாயம். கரியுரி - யானைத்தோல்.
5. பொ-ரை: ஊர்மக்கள் வரவேற்று
இடும் பலியைத் தலையோட்டில் ஏற்று உண்பவர்.
வானத்தில் பொலிவோடு இலங்கும் திருவுருவினர்.
மண்ணுலக மக்கள் விரும்பி வந்து தம் திருவடிகளை
வணங்க மணம் கமழும் மார்பகத்தே படப்பாம்பு
ஆமைஓடு உருத்திராக்கம் ஆகியன அணிந்தவர். அவர்
தமக்கு இடமாய் உள்ளதால், மேகங்கள் படியும்
வெண்மையான வலிய கடல் அலைகள் மிகுதியான நீருடன்
இழிந்துவரும் மணிகள், முத்துக்கள், ஒழுங்குற
நிறைந்த வளைந்த சங்குகள், ஒளி பொருந்திய
பவளமணி ஆகியவற்றைக் கரையில் கொணர்ந்து வீசும்
கழுமலத்தை நினையநம்வினைத் தீமை நீங்கும்.
கு-ரை: ஊர் எதிர்ந்திடு பலி -
ஊரவர் இடுகின்ற பிச்சை. கலன் - உண்ணும்
பாத்திரம். படஅரவு, ஆமை, அக்கு அணிந்தவர்க்கு
இடமாம் எனப்பிரிக்க. அக்கு - உருத்திராக்கம்.
அக்குமணியுமாம். வன்திரை மணி நித்திலம் முத்தம்
சுரிசங்கம் ஒண்மணி வரன்றி கரைக்கு எற்றும்
கழுமலம் எனக்கூட்டுக. சுரிசங்கம் - மூக்குச்
சுரிந்திருக்கின்ற சங்குகள்.
|