858. முன்னுயிர்த்தோற்றமு
மிறுதியுமாகி
முடியுடையமரர்க ளடிபணிந்தேத்தப்
பின்னியசடைமிசைப்
பிறைநிறைவித்த
பேரருளாளனார் பேணியகோயில்
பொன்னியனறுமலர் புனலொடுதூபஞ்
சாந்தமுமேந்திய கையினராகிக்
கன்னியர்நாடொறும் வேடமேபரவுங்
கழுமலநினையநம் வினைகரிசறுமே. 6
859. கொலைக்கணித்தாவரு
கூற்றுதைசெய்தார்
குரைகழல்பணிந்தவர்க்
கருளியபொருளின்
நிலைக்கணித்தாவர
நினையவல்லார்தந்
நெடுந்துயர்தவிர்த்தவெந்
நிமலருக்கிடமாம்
மலைக்கணித்தாவர வன்றிரைமுரல
மதுவிரிபுன்னைகண் முத்தெனவரும்பக்
கலைக்கணங்கானலி னீழலில்வாழுங்
கழுமலநினையநம் வினைகரிசறுமே. 7
____________________________________________________
6. பொ-ரை: உயிர்கட்கு முதலில்
தோற்றத்தையும் பின்னர் இறுதியையும்
வழங்குவோராய், முடியணிந்த தேவர் கணங்கள் தம்
திருவடிகளைப் பணிந்து போற்ற, வட்டமாக, முறுக்கிய
சடையின் மேல் பிறையைச் சூடிய பெருங்
கருணையாளராகிய சிவபிரான் விரும்பிய கோயிலை
உடையதும், பொன் போன்ற மணம் பொருந்திய
மலர்கள் புனல் தூபம் சந்தனம் முதலியன ஏந்திய
கையினராய்க் கன்னியர்கள் நாள்தோறும் வந்து
இறைவர் கொண்டருளிய வடிவங்களைப் போற்றி
வழிபடுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைத்
தீமைகள் நீங்கும்.
கு-ரை: முன் - சர்வ சங்காரகாலத்து.
உயிர்த்தோற்றமும் இறுதியும் ஆகி - உயிர்களை
உடம்போடு புணர்த்துகின்ற பிறப்பும்
அவற்றைப்பிரிக்கின்ற இறுதியும் ஆகிய
இரண்டிற்கும் காரணமாகி, கன்னியர் மலர் தூபம்
சாந்தம் ஏந்திய கையினராகிப் பரவும் கழுமலம்
எனக் கூட்டுக.
7. பொ-ரை: மார்க்கண்டேயர்
உயிரைக் கொல்லுதற்கு அணித்தாக வந்த கூற்றுவனை
உதைத்தவர். ஒலிக்கின்ற கழல் அணிந்த தமது
|