பக்கம் எண் :

878திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


860. புயம்பலவுடையதென் னிலங்கையர்வேந்தன்

பொருவரையெடுத்தவன் பொன்முடிதிண்டோள்

பயம்பலபடவடர்த் தருளியபெருமான்

பரிவொடுமினிதுறை கோயிலதாகும்

வியன்பலவிண்ணினு மண்ணினுமெங்கும்

வேறுவேறுகங்களிற் பெயருளதென்னக்

கயம்பலபடக்கடற் றிரைகரைக்கெற்றுங்

கழுமலநினையநம் வினைகரிசறுமே. 8

____________________________________________________

திருவடியைப் பணிந்தவர்கட்கு உரியதாக அருளிச் செய்த வீட்டின்பமாகிய நிலை அணியதாக வரவும் அவர்தம் நெடுந்துயர் போகவும் நினைக்கும் எம் நிமலர். அவர்க்கு இடமாக விளங்குவதும், தோணிமலைக்கு அருகில் வரும் வலிய அலைகள் ஒலிப்பதும், தேன் நிறைந்த புன்னைகள் முத்தென அரும்பவும் கடற்கரைச் சோலைகளின் நீழலில் மானினங்கள் வாழ்வதுமாய கழுமல நகரை நினைய நம் வினைக் குற்றங்கள் நீங்கும்.

கு-ரை: கொலைக்கு அணித்தாவரு கூற்று - கொலையை அணிய தாக்க வருகின்ற யமன். குரை கழல் - ஒலிக்குங் கழல். பணிந்தவர்க்கு அருளிய பொருளின் நிலைக்கு - வணங்கிய அடியார்களுக்கு அருளிச்செய்த வீட்டின்ப மாகிய நிலைக்கு. அணித்தாவர - அணுகிவர. மலைக்கு - தோணிமலைக்கு. வன்திரை அணித் தாவர முரல - வலிய அலைகள் அணுகி வரவும் ஒலிக்கவும். மது - தேன். கலைக் கணம் - மான் கூட்டம். கானல் - கடற்கரைச் சோலை.

8. பொ-ரை: தோள்கள் பலவற்றை உடைய தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க அவன் பொன் முடிகளையும், வலிய தோள்களையும் அச்சம் பல உண்டாகுமாறு அடர்த்தருளிய பெருமான் விருப்போடு மகிழ்ந்துறையும் கோயிலை உடையதும் அகன்ற விண்ணுலகிலும் மண்ணுலகிலும் வேறுவேறு யுகங்களில் வேறுவேறு பெயர்களுடையதாய் விளங்குவதும் நீர்த்துளி பலவாகத் தோன்ற கடல் அலைகள் தொடர்ந்து வந்து கரையில் வீசுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.

கு-ரை: புயம் பல உடைய - இருபது தோள்களை உடைய. பயம் பலபட. பல வகையில் அச்சப்பட. பரிவொடும் - விருப்பத்தோடும். வியன் பல விண்ணினும் - அகன்ற பலவாகிய ஆகாயத்தி