பக்கம் எண் :

 80. கோயில்879


861. விலங்கலொன்றேந்திவன் மழைதடுத்தோனும்

வெறிகமழ்தாமரை யோனுமென்றிவர்தம்

பலங்களானேடியு மறிவரிதாய

பரிசினன்மருவிநின் றினிதுறைகோயில்

மலங்கிவன்றிரைவரை யெனப்பரந்தெங்கு

மறிகடலோங்கிவெள் ளிப்பியுஞ்சுமந்து

கலங்கடன்சரக்கொடு நிரக்கவந்தேறுங்

கழுமலநினையநம் வினைகரிசறுமே. 9

862. ஆம்பலதவமுயன் றறவுரைசொல்லு

மறிவிலாச்சமணருந் தேரருங்கணிசேர்

நோம்பலதவமறி யாதவர்நொடிந்த

மூதுரைகொள்கிலா முதல்வர்தம்மேனிச்

____________________________________________________

னும். வேறு வேறு உகங்களில் பெயர் உளது என்ன - ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பெயரை உடையதென்று. கயம் - யானை. நீர் எனினும் ஆம்.

9. பொ-ரை: கோவர்த்தனத்தைக் குடையாகக் கவித்துக் கொடிய மழையைத் தடுத்த திருமாலும், மணம்கமழ் தாமரையில் தோன்றிய பிரமனும் ஆகிய இவர்கள் தம் வலிமையினால் தேடியும் அறிய முடியாத தன்மையனாகிய சிவபெருமான், விரும்பி வந்து மகிழ்வாக உறையும் கோயில், வெள்ளிய அலைகள் ஒன்றோடொன்று கலந்து மலைகளைப் போலப் பரவி எங்கும் கரையில் மோதி மீளும் கடலில் பெருமிதத்துடன் கப்பல்கள் தம் சரக்கொடு வெள்ளிய முத்துச் சிப்பிகளையும் சுமந்து கரையை நோக்கி வரும் கழுமலமாகும் அதனை நினைய நும்வினைத் தீமை நீங்கும்.

கு-ரை: விலங்கல் - கோவர்த்தன கிரி. தம் பலங்களால் - தமது உடற்பலத்தால். மலங்கி - கலங்கி. வரையென - மலையைப் போல. கலங்கள் தன்சரக்கொடு நிரக்க - கப்பல்கள் தன்னிடத்து ஏற்றப்பட்டுள்ள சரக்கோடு வரிசையாக.

10. பொ-ரை: இயன்ற பலவகையான தவங்களை மேற்கொண்டு பிறர்க்கு அறவுரை கூறும் அறிவற்ற சமணரும் புத்தரும், எண்ணத்தக்க வருத்தத்தைத் தரும் தவம் பலவற்றை அறியாதவராய்க் கூறும் பழமொழிகளை ஏற்று அருளாத தலைவர், தம் மேனி மீது திருநீற்றைப் பூசிக் கொண்டு வெண்டலையை உண்கலனாக் கொண்டு மகளிர் இடும்