பக்கம் எண் :

880திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


சாம்பலும்பூசிவெண் டலைகலனாகத்

தையலாரிடுபலி வையகத்தேற்றுக்

காம்பனதோளியொ டினிதுறைகோயில்

கழுமலநினையநம் வினைகரிசறுமே. 10

863. கலிகெழுபாரிடை யூரெனவுளதாங்

கழுமலம்விரும்பிய கோயில்கொண்டவர்மேல்

வலிகெழுமனமிக வைத்தவன்மறைசேர்

வருங்கலைஞானசம் பந்தனதமிழின்

ஒலிகெழுமாலையென் றுரைசெய்தபத்து

முண்மையினானினைந் தேத்தவல்லார்மேல்

மெலிகெழுதுயரடை யாவினைசிந்தும்

விண்ணவராற்றலின் மிகப்பெறுவாரே. 11

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

பலியை உலகில் ஏற்று மூங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் கோயிலை உடைய கழுமலத்தை நினைய நம் வினைக்குற்றம் தீரும்.

கு-ரை: ஆம்பலதவம் முயன்று - ஆகிய பலவிதமான தவங்களைச் செய்து. தேரர் - புத்தர். கணிசேர் - எண்ணத் தக்க. நோம் பல தவம் - துன்பத்தைத் தரும் பல தவங்களை அறியாதவர் - அறியாதவர்களாய். நொடிந்த - சொன்ன. தையலார் - பெண்கள். காம்பு அனதோளியொடு - மூங்கிலையொத்த தோளையுடைய உமாதேவியொடு.

11. பொ-ரை: ஆரவாரம் மிக்க உலகில் ஊர் எனப் போற்ற விளங்கும் கழுமலத்தை விரும்பிக் கோயில் கொண்டுள்ள இறைவரிடம் உறுதியோடு தன் மனத்தை வைத்தவனும், வேதங்களிலும் கலைகளிலும் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன், இசையோடு பாடிய மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும், உண்மையோடு நினைந்து ஏத்த வல்லவரை, மெலிவைத் தரும் துன்பங்கள் சாரா. வினைகள் நீங்கும், விண்ணவரினும் மேம்பட்ட ஆற்றலை அவர்கள் பெறுவார்கள்.

கு-ரை: கலி கெழு பார் - ஒலிமிக்க உலகம். வலி கெழு மனம் - உறுதியான மனம். ஒலி கெழு மாலை - இசையோடு கூடிய மாலை. மெலி கெழு துயர் - மெலிவைச் சேர்க்கும் துன்பம்.