885. இரவன் பகலோனு மெச்சத்
திமையோரை
நிரவிட் டருள்செய்த நிமலன்
னுறைகோயில்
குரவஞ் சுரபுன்னை குளிர்கோங்
கிளவேங்கை
விரவும் பொழிலந்தண் வீழி
மிழலையே. 4
886. கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப
பெண்ணுக் கருள்செய்த பெருமா
னுறைகோயில்
மண்ணிற் பெருவேள்வி வளர்தீப்
புகைநாளும்
விண்ணிற் புயல்காட்டும் வீழி
மிழலையே. 5
887. மாலா யிரங்கொண்டு மலர்க்கண்
ணிடவாழி
ஏலா வலயத்தோ டீந்தா னுறைகோயில்
____________________________________________________
4. பொ-ரை: தக்கன் செய்த
யாகத்தில் சந்திரன், சூரியன் ஏனைய தேவர்கள்
ஆகியோரை, வீரபத்திரரை அனுப்பித் தண்டம்
செய்து செம்மைப்படுத்தி அருள்செய்த சிவபிரான்
உறையும் கோயில் குரா, சுரபுன்னை, குளிர்ந்த
கோங்கு, இளவேங்கை ஆகியன விரவிய பொழில்கள்
சூழ்ந்த அழகிய தட்பமுடைய வீழிமிழலையாகும்.
கு-ரை: தக்கயாகத்தில் சூரியன்
சந்திரன் முதலான தேவர்களைச் செப்பஞ்செய்து
அருள்செய்த நிமலன் கோயில் இது என்கின்றது.
இரவன் - சந்திரன். பகலோன் - சூரியன். எச்சத்து
யாகத்தில். நிரவிட்டு - செப்பஞ்செய்து.
5. பொ-ரை: நெற்றி விழியில்
தோன்றிய கனலால் காமனைப் பொடி செய்து,
இரதிதேவிவேண்ட அவள் கண்களுக்கு மட்டும்
புலனாகுமாறு அருள் செய்த பெருமான் உறையும் கோயில்
மண்ணில் செய்யும் பெரிய வேள்விகளில் வளரும்
தீப்புகை நாள்தோறும் விண்ணகத்தே மழை மேகங்களை
உருவாக்கும் திருவீழிமிழலை யாகும்.
கு-ரை: மன்மதன் எரிய விழித்து,
இரதிக்கு அருள்செய்த பெருமான் கோயில் இது
என்கின்றது. பெண் - இரதி. உமையெனப்
பொருள்கொண்டு இடப்பாகத்தை அருளிய எனப் பொருள்
உரைப்பாரும் உளர். பூமியில் செய்யப்படும் யாகப்
புகை, வானத்தில் மேகத்தை வளர்க்கும் என்ற
கருத்தைப் பின்னிரண்டடிகளில் காண்க.
6. பொ-ரை: திருமால் ஆயிரம்
தாமரைப் பூக்களைக் கொண்டு அருச்சித்தபோது ஒன்று
குறையக் கண்டு, தன், மலர் போன்ற கண்ணை
|