சேலா கியபொய்கைச் செழுநீர்க்
கமலங்கள்
மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே. 6
888. மதியால் வழிபட்டான் வாணாள்
கொடுபோவான்
கொதியா வருகூற்றைக் குமைத்தா
னுறைகோயில்
நெதியான் மிகுசெல்வர் நித்த
நியமங்கள்
விதியா னிற்கின்றார் வீழி
மிழலையே. 7
889. எடுத்தான் றருக்கினை யிழித்தான்
விரலூன்றிக்
கொடுத்தான் வாளாளாக் கொண்டா
னுறைகோயில்
படித்தார் மறைவேள்வி பயின்றார்
பாவத்தை
விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.
8
____________________________________________________
இடந்து சாத்திய அளவில் பிறர்
சுமக்கலாற்றாத சக்கராயுதம் ஆகிய ஆழியை அவனுக்கு
ஈந்தருளிய பெருமான் உறையும் கோயில்,
சேல்மீன்கள் பொருந்திய செழுநீர்ப்
பொய்கைகளில் முளைத்த தாமரை மலர்கள்
தீப்பிழப்பு போலக் காணப்படும்
திருவீழிமிழலையாகும்.
கு-ரை: திருமால் ஆயிரம் பூவோடு
கண்கொண்ட வழிபாடு செய்யச் சக்கரம் ஈந்த
பெருமான் கோயில் இது என்கின்றது. இவ் வரலாறு
இத்தலத்தில் நிகழ்ந்தது. ஏலாவலயம் -
சுமக்கலாற்றாத சக்கரம். கமலங்கள் எரிகாட்டும் -
செந்தாமரை தீப்பிழம்பைப் போல விளங்கும்.
7. பொ-ரை: மெய்யறிவால் தன்னை
வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாளைக்
கையகப் படுத்தச் சினந்து வந்த கூற்றுவனை அழித்த
சிவபிரானது கோயில், நிதியால் மிகுந்த
செல்வர்கள் நாள்தோறும் செய்யும் நியமங்களை
விதிப்படி செய்து வாழும் திருவீழிமிழலையாகும்.
கு-ரை: காலகாலன் கோயில் இது
என்கின்றது. மதியால் வழிபட்டான் - அறிவோடு
வழிபட்ட மார்க்கண்டன். கொதியா - கோபித்து.
குமைத்தான் - உரு அழியச் செய்தவன். நெதியான்
மிகுசெல்வர் - தியானத்தால் மிக்க செல்வர்.
நியமங்கள் - யோக உறுப்புகள் எட்டனுள் ஒன்றாகிய
நியமம்.
8. பொ-ரை: கயிலை மலையைப்
பெயர்த்தெடுத்த இராவணனின் செருக்கினைத் தன்
கால்விரலை ஊன்றி அழித்தவனும், பின்
|