890. கிடந்தா னிருந்தானுங் கீழ்மேல்
காணாது
தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா
யவன்கோயில்
படந்தாங் கரவல்குற் பவளத்
துவர்வாய்மேல்
விடந்தாங் கியகண்ணார் வீழி
மிழலையே. 9
891. சிக்கார் துவராடைச் சிறுதட்
டுடையாரும்
நக்காங் கலர்தூற்றுந் நம்பா
னுறைகோயில்
தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு
மிக்கா ரவர்வாழும் வீழி மிழலையே. 10
____________________________________________________
அவன் பிழையுணர்ந்து வேண்ட, வாள்
முதலியன கொடுத்து, அவனை அடிமையாக ஏற்றுக்
கொண்டருளியவனுமாகிய சிவபிரான் உறையும்
கோயில், வேதங்களைப் பயின்றவர்களும்,
வேள்விகள் பலவற்றைச் செய்பவர்களும், பாவங்களை
விட்டவர்களுமாகிய அந்தணர்கள் மிகுதியாக வாழும்,
திருவீழிமிழலையாகும்.
கு-ரை: இராவணனது தருக்கினை அழித்து
வாள்கொடுத்து ஆளாகக் கொண்ட இறைவன் கோயில்
இது என்கின்றது, மறை படித்தார், வேள்வி
பயின்றார் என மாறிக் கூட்டுக. வேதம் ஓதி வேள்வி
இடைவிடாது செய்து பாபத்தை விட்டவர்கள்
வாழ்கின்ற மிழலை என்க.
9. பொ-ரை: பாம்பணையில்
துயிலும் திருமாலும், தாமரை மலரில் உறையும்
நான்முகனும் அடிமுடிகளைக் காணாது திரும்பித்
தொடர்ந்து ஏத்த அழலுருவாய் நின்ற சிவபிரானது
கோயில். அரவின் படம் போன்ற அல்குலையும்,
பவளம் போன்ற வாயினையும் விடம் பொருந்திய
கண்களையும் உடைய மகளிர் மிகுதியாக வாழும்
திருவீழிமிழலையாகும்.
கு-ரை: மாலும் அயனும் அறியாவண்ணம்
அழல் உருவானான் இடம் இது என்கின்றது. கிடந்தான் -
பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமால்.
இருந்தான் - பூமேல் இருந்த பிரமன். சுடராயவன் - தீ
உருவானவன். அரவுபோன்ற அல்குலையும், வாயின் மேல்
விஷத்தையும் தாங்கிய கண்ணார் என்றது பாம்பு
ஓரிடமும் விடம் ஓரிடமும் இருக்கின்றதென்னும்
வியப்புத் தோன்றக் கூறியது.
10. பொ-ரை: சிக்குப் பிடித்த
காவி உடையையும் சிறிய ஒலைத் தடுக்குக்களையும்
உடைய புத்தரும் சமணர்களும் ஏளனம் செய்து
|