892. மேனின் றிழிகோயில் வீழி
மிழலையுள்
ஏனத் தெயிற்றானை
யெழிலார்பொழிற்காழி
ஞானத் துயர்கின்ற நலங்கொள்
சம்பந்தன்
வாய்மைத் திவைசொல்ல வல்லோர்
நல்லோரே. 11
திருச்சிற்றம்பலம்
____________________________________________________
சிரித்துப் பழிதூற்றும் நம் இறைவர்
தங்கும் கோயில், தக்கவராய், வேதவேள்விகள்
செய்வதில் தலையாயவராய், உலகில்
மேம்பட்டவராய் விளங்கும் மறையவர் வாழும்
வீழிமிழலை ஆகும்.
கு-ரை: புறச்சமயிகள்
புறம்பழிக்கும் நமதிறைவன் கோயில் இது
என்கின்றது. சிக்கு ஆர் துவர் ஆடை - சிக்கு நாறும்
காவியுடை. தட்டு உடை - ஓலைத்தடுக்காகிய உடை, நக்கு
- சிரித்து. அலர் தூற்றும் - பழிதூற்றும்.
தக்காராய், வேதவேள்வியில் தலையானவராய்,
உலகுக்கே மிக்கவர்கள் வாழுகின்ற வீழிமிழலை
என்க.
11. பொ-ரை: விண்ணிலிருந்து இழிந்து
வந்துள்ள வீழிமிழலைக் கோயிலில், பன்றிப்பல்
சூடியவனாய் எழுந்தருளி விளங்கும் சிவபிரானை,
அழகிய பொழில்கள் சூழ்ந்த காழிப் பதியில்
தோன்றிய ஞானத்தால் மேம்பட்ட அழகிய
ஞானசம்பந்தன், உண்மையை உடையவனாய் ஓதிய
இப்பதிகத்தைச் சொல்ல வல்லவர் நல்லவர்
ஆவார்.
கு-ரை: வீழிநாதனைக் காழி
ஞானசம்பந்தன் சொன்ன இப்பாடல் பாடவல்லார்
நல்லார் என்கின்றது. மேல்நின்று இழி கோயில் -
விண்ணிழிகோயில். இது இத்தலத்துச்
சிறப்புக்களுள் ஒன்று. ஏனத்து எயிற்றானை -
பன்றிக்கொம்பை அணிந்தானை. வாய்மைத்து இவை -
உண்மையை உடையனவாகிய இவற்றை.
திருஞானசம்பந்தர்
புராணம்
நிறைகுடந் தூபந்தீபம்
நீடநிரைத் தேந்தி
நறைமலர்ப் பொற்சுண்ணம் நறும்பொரியுந் தூவி
மறையொலிபோய் வானளப்ப மாமுரசம் ஆர்ப்ப
இறைவர்திரு மைந்தர்தமை எதிர்கொள்வர வேற்றார்.
- சேக்கிழார். |
|