பக்கம் எண் :

900திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


899. மிளிரும் மரவோடும் வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
கிளரும் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே. 7

900. கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழனாளும்
நிலையா நினைவார்மே னில்லா வினைதானே. 8

901. சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய

____________________________________________________

7. பொ-ரை: விளங்குகின்ற பாம்போடு வெள்ளை நிறமுடைய பிறையை முடியிற்சூடி,வளர்கின்ற பொழில்கள் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும், விளங்குகின்ற சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபிரானுடைய குற்றமற்ற திருவடிகளை ஏத்தினால், மிக்க நோய்கள் தளர்வுறும்; தவம் நம்மை வந்து அடையும்.

கு-ரை: மிளிரும் அரவு - விளங்குகின்ற பாம்பு. அரவுக்கு விளக்கம் அடியார்கள் அன்போடு அடைக்கலமாக நோக்கும் இறைவனுடைய திருவடி, கரம், கழுத்து, முடி, செவி, இவற்றிலெல்லாம் அணியாக இருந்து அடியார்கள் மனத்தைக் கவர்தல், கேடில்கழல் - அழிந்து படாத்திருவடி. உறுநோய்கள் தளரும், தவம் சாரும் என முடிக்க.

8. பொ-ரை: கொல்லும் தொழிலில் வல்ல மழுவாயுதத்தோடு, அழகிய வில்லையும் கையில் ஏந்தி, கரையோடும் மோதும் நீர் நிரம்பிய அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும் இலை வடிவமான முத்தலைச் சூலத்தைப் படையாகக் கொண்ட சிவபெருமான் திருவடிகளை நாள்தோறும் நிலையாக நினைவார்பால் வினைகள் சாரா.

கு-ரை: கொலை ஆர்மழு என்றது படைக்கலம் என்ற பொதுமை பற்றி வந்த அடை; இறைவன் மழு யாரையும் கொலை செய்தல் இல்லையாதலின். கோலச் சிலை - அழகுக்காகத் தரிக்கப்பட்டவில்.

9. பொ-ரை: சிறகுகளை உடைய வரி வண்டுகள் தேனுண்டு இசைபாட, வேதம் ஓதும் அந்தணர் நிறைந்த அம்பர் மாகாளத்தில்