பக்கம் எண் :

 84. திருநாகைக்காரோணம்901


நறையார் மலரானும் மாலும் காண்பொண்ணா
இறையான் கழலேத்த வெய்தும் மின்பம்மே. 9

902. மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசாதுரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய.
ஈசா வென்பார்கட் கில்லை யிடர்தானே. 10

901. வெரிநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வா ருயர்வா னடைவாரே. 11

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

எழுந்தருளியிருப்பவனும், தேன் நிறைந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் காண ஒண்ணாத தலைமையாளனுமாய சிவபிரான் திருவடிகளை ஏத்தினால் இன்பம் கிடைக்கும்.

கு-ரை: மறையார் - அந்தணர். நறை - தேன். இறையான் சிவபெருமான்.

10. பொ-ரை அழுக்கடைந்த மேனியரும், துன்ப வடிவினராகி, மண்டை என்னும் பாத்திரத்தில் உணவு கொள்பவருமாய புத்தரும், சமணரும் மனம் கூசாமல் கூறும் பொய்யுரைகளை ஏற்றுக் கொள்ளல் நன்மை தாராது. மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியுள்ள ஈசனே என்று கூறுபவர்கட்கு இடர் வாராது.

கு-ரை: மாசூர்வடிவு - அழுக்கடைந்த மேனி. இன்னார் - துன்பமுடையவர்கள். மண்டை - வாயகன்ற உண்ணும் பாத்திரம். கூசாது உரைக்கும் சொல் - பொய் என்றறிந்தும் மனமும் வாயும் கூசாமல் உரைக்குஞ்சொல். வாசு ஆர் பொழில் - நீர் நிறைந்த பொழில்; வெட்டி வேரும் ஆம். வாசு - நீர். (பெருங்கதை. 1. 53. 77)

11. பொ-ரை: அஞ்சத்தக்க ஊழி வெள்ளம். உலகத்தை மூட, அவ்வெள்ளத்தே ஓங்கிமேல் மிதந்த வேணுபுரம் என்னும் சீகாழிப் பதியுள் தோன்றிய அழகியனவும் சிறந்தனவுமான வேதங்களில் வல்ல