திருஞானசம்பந்தர்
புராணம்
அம்பர் மாநகர்
அணைந்துமா காளத்தில்
அண்ணலார்
அமர்கின்ற
செம்பொன்
மாமதிற் கோயிலை வலங்கொண்டு
திருமுன்பு
பணிந்தேத்தி
வம்பு லாமலர்
தூவிமுன் பரவியே
வண்டமி
ழிசைமாலை
உம்பர்
வாழநஞ் சுண்டவர் தமைப்பணிந்
துருகும்அன்
பொடுதாழ்ந்தார்.
தாழ்ந்து நாவினுக் கரசுடன்
தம்பிரான்
கோயில் முன்
புறமெய்திச்
சூழ்ந்த
தொண்டரோ டப்பதி யமர்பவர்
சுரநதி முடிமீது
வீழ்ந்த
வேணியர் தமைப்பெருங் காலங்கள்
விரும்பினாற்
கும்பிட்டு
வாழ்ந்தி
ருந்தனர் காழியார் வாழவந்
தருளிய
மறைவேந்தர்.
- சேக்கிழார். |