921. அங்கோல் வளைமங்கை காண வனலேந்திக்
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்க டிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோ னமையாள் னல்ல நகரானே. 7
922. பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
எண்ணா தெடுத்தானை யிறையே விரலூன்றி
நண்ணார் புரமெய்தா னல்ல நகரானே. 8
923. நாகத் தணையானு நளிர்மா மலரானும்
போகத் தியல்பினாற் பொலிய வழகாகும்
____________________________________________________
7. பொ-ரை: அழகிய திரண்ட வளையல்களை அணிந்த
உமையம்மை காணக் கையில் அனல் ஏந்தி, தேன் நிறைந்த மணமுடைய கொன்றை மலர்மாலை சூடி, இளமைக்
கோலத்தில் சுடுகாட்டை அரங்காகக் கொண்டு எரியாடும்
நம் தலைவனாகிய சிவபிரான், நம்மை ஆட்கொள்ளுதற்
பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: உமையம்மைகாணக் கொன்றைசூடி, ஊழிக்காலத்தில்
நடனம் புரிபவர் இவர் என்கின்றது. அம் கோல் வளை - அழகிய திரண்ட வளையல். கொங்கு -
மணம் நிறைந்த தேன். குழகாக - இளமையாக.
8. பொ-ரை: உமையம்மையைத் திருமேனியின்
ஒரு கூற்றிலே கொண்டுள்ள பெருமானும், பிறை மதியை
முடியில் சூடிக் கண்பொருந்திய நுதலினனாய்
விளங்குவோனும், இறைவனது வரம் பிலாற்றலை மனத்தால்
எண்ணாது கயிலை மலையை எடுத்த இராவணனைச் சிறிதே
விரலூன்றி அடர்த்தவனும், பகைவர்தம் முப்
புரங்களை எய்தழித்தவனுமாகிய சிவபிரான், நம்மை
ஆட்கொண்டருள, நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: இராவணனை விரலால் ஊன்றித் திரிபுரம்
எரித்தவர் இவர் என்கின்றது. எண்ணாது -
பின்வருகின்ற தீங்கை முன் ஆராயாது. இறையே -
சிறிது. நண்ணார் - பகைவர்.
9. பொ-ரை: பாம்பணையில் துயிலும் திருமாலும்,
தண்ணிய, தாமரை மலர்மேல் எழுந்தருளியுள்ள நான்முகனும்,
திருமகள்
|