ஆகத் தவளோடு மமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தா னல்ல நகரானே. 9
924. குறியில் சமணோடு குண்டர் வண்டேரர்
அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்ல நகரானே.
10
925. நலமார் மறையோர்வாா நல்ல நகர்மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு
தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே. 11
திருச்சிற்றம்பலம்
___________________________________________________
கலைமகளிரோடு போகம் பொருந்தி வாழ,
தானும் மலை மகளோடு கூடிப் போகியாய் இருந்து அருள்
செய்த, அழகு பொருந்திய பாம்பை இடையில் அரைநாணாகக்
கட்டிக் கொண்டிருப்பவன் ஆகிய சிவ பிரான், நம்மை
ஆளநல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: நாகத்தணையான் - திருமால். திருமாலை
இச்சொல்லால் குறித்தது, அணையிருந்தும் அணையிலேயே
அருகில் அலர்மகள் இருந்தும், மாலுக்குப் போகம்
கூடவேண்டுமாயின் இறைவன் போகியாய இருந்தால் அல்லது
பயனில்லை என்பதைக் காட்ட, மாமலரான் என்பதும்
அங்ஙனமே.
10. பொ-ரை: குறிக்கோள் இல்லாத
சமணர்களும் புத்தரும் கூறும் அறிவற்ற சொற்களைக்
கேட்டு நாள்களைப் பயனற்றவனாய்ப் போக்காதீர்,
புள்ளிகளோடு கூடிய பாம்பினை இடையிற் கட்டிய பரமன்,
நம் பொல்லா வினைகளைத் தீர்க்கும் நிலையில்
தேன் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த நல்லம் என்னும்
நகரிடை எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: இது பொல்லா வினையைப்
போக்குவார் இவர் என்கின்றது. குறி இல் சமண் -
குறிக்கோளற்ற சமணர். குண்டர் - அறிவிலிகள். தேரர்
- புத்தர். அவமே - வீணாக, பொறி - படப்பொறி. நறை -
தேன்.
11. பொ-ரை: நன்மைகள் நிறைந்த வேதங்களை
ஓதும் அந்தணர்கள் வாழும் நல்லம் நகரில் எழுந்தருளிய,
கொல்லும் தொழில்
|