பக்கம் எண் :

 95. திருவிடைமருதூர்959


1020. அம்பொ னாலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே. 7

1021. அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்க முண்மையே. 8

1022. அருவ னாலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே. 9

1023. ஆர நாகமாம், சீர னாலவாய்த்
தேர மண்சொற்ற, வீர னென்பரே. 10

___________________________________________________

7. பொ-ரை: அழகிய பொன்மயமான ஆலவாய்த் திருக்கோயிலில் விளங்கும் இறைவனுடைய திருவடிகளே நமக்குச் சார்வாகும் என நம்பி வாழ்பவரின் துன்பம் நீங்கும்.

கு-ரை: நம்பனார் கழல் நம்பி - இதுவே எமக்கு இம்மையும் மறுமையும் இன்பமும் வீடும் என்று உறுதி கொண்டு.

8. பொ-ரை: அரக்கனாகிய பெருவலிபடைத்த இராவணனைக் கால் விரலால் நெரித்தருளிய ஆலவாய் அரன் புகழை உரைக்கும் உள்ளத்தார்க்கு அவனது கருணை உளதாகும்.

கு-ரை: நெருக்கன் - நெருக்கியவன்.

9. பொ-ரை: அருவனாய் விளங்கும் இறைவன் திருவாலவாயில் திருமால் பிரமர் ஆகிய இருவர் போற்றும் உருவனாய் மருவி ஓங்கி நிற்கின்றான்.

கு-ரை: அருவன் - அருவமானவன். இருவர் - அயனும்மாலும்.

10. பொ-ரை: பாம்பாகிய ஆரத்தை அணிந்தவனாய், ஆலவாயில் பெரும் புகழாளனாய் விளங்கும் இறைவன், புத்தரையும் சமணரையும் அழித்த பெருவீரன் ஆவான் என்று அடியவர்கள் அவனைப் புகழ்ந்து போற்றுவார்கள்.

கு-ரை: ஆரம் - மாலை. சீரன் -புகழுடையவன். தேரர் - புத்தர். அமண் - அமணர்.