பக்கம் எண் :

960திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1024. அடிக ளாலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ், செடிக ணீக்குமே. 1

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

11. பொ-ரை: ஆலவாயில் எழுந்தருளிய அடிகளாகிய இறைவனது திருவருளில் தோய்ந்த ஞானசம்பந்தனின் அழிவற்ற இனிய இத் தமிழ் மாலை நமக்கு வரும் வினைகளைப் போக்குவதாகும்.

கு-ரை: செடிகள் - வினைகள்.

திருஞானசம்பந்தர் புராணம்

சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும்

இனிஎதிர் காலத்தின் சிறப்பும்

இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால்

எற்றைக்குந் திருவரு ளுடையேம்

நன்றியில் நெறியில் அழுந்தியநாடும்

நற்றமிழ் வேந்தனும் உய்ந்து

வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும்

மேன்மையும் படைத்தனம் என்பார்.

ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்தினி திருந்த
காள கண்டரைக் கண்களின் பயன்பெறக் கண்டு
நீள வந்தெழும் அன்பினால் பணிந்தெழ நிறையார்
மீள வும்பல முறைநில முறவிழுந் தெழுவார்.

நீல மாமிடற் றாலவா யான்என நிலவும்
மூல மாகிய திருவிருக் குக்குறள் மொழிந்து
சீலமாதவத்திருத்தொண்டர்தம்மொடுந் திளைத்தார்
சாலு மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன்.

- சேக்கிழார்.