பக்கம் எண் :

964திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


96. திருஅன்னியூர்

பதிக வரலாறு:

வெங்குருவேந்தர் திருக்குறுக்கைப் பதியை வணங்கி, அன்னியூரை அடைந்தார்கள். அங்கு எழுந்தருளியுள்ள ஆபத்சகாயநாதர் அடியிணைபோற்றி "மன்னியூரிறை" என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்தார்.

திருவிருக்குக்குறள்

பண்: குறிஞ்சி

பதிக எண்:96

திருச்சிற்றம்பலம்

1036. மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
அன்னி யூரமர், மன்னு சோதியே. 1

1037. பழகுந் தொண்டர்வம், அழக னன்னியூர்க்
குழகன் சேவடி, தொழுது வாழ்மினே. 2

1038. நீதி பேணுவீர், ஆதி யன்னியூர்ச்
சோதி நாமமே, ஓதி யுய்ம்மினே. 3

___________________________________________________

1. பொ-ரை: திருஅன்னியூரில் எழுந்தருளிய நிலைபெற்ற ஒளி வடிவினனாகிய சிவன், பிறை சூடிய திருமுடியோடு பல தலங்களிலும் எழுந்தருளியிருந்து, ஆங்காங்குள்ள மக்கட்குத் தலைவனாய் விளங்குபவன்.

கு-ரை: சென்னி -தலை. சோதிமன்னிஊர் இறை என முடிக்க.

2. பொ-ரை: இறைவன்பால் மனம் ஒன்றிப் பழகும் தொண்டர்களே வாருங்கள். அன்னியூரில் அழகனாகவும் இளமைத் தன்மை உடையவனாகவும் எழுந்தருளியுள்ள சிவபிரானின் செம்மையான திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.

கு-ரை: வம் - வாருங்கள். குழகன் - இளையவன்.

3. பொ-ரை: நீதியைப் போற்றி அதன்படி வாழ்கின்றவர்களே.