பக்கம் எண் :

 97. திருப்புறவம்965


1039. பத்த ராயினீர், அத்த ரன்னியூர்ச்
சித்தர் தாள் தொழ, முத்த ராவரே. 4

1040. நிறைவு வேண்டுவீர், அறவ னன்னியூர்
மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே. 5

1041. இன்பம் வேண்டுவீர், அன்ப னன்னியூர்
நன்பொ னென்னுமின், உம்பராகவே. 6

1042. அந்த ணாளர்தம், தந்தை யன்னியூர்
எந்தை யேயெனப், பந்த நீங்குமே. 7

____________________________________________________

அன்னியூரில் விளங்கும் ஒளி வடிவினனாகிய சிவபிரான் திருநாமங்களையே ஓதி உய்வீர்களாக.

4. பொ-ரை: இறைவனிடம் பத்திமை பூண்டவர்களே, தலைமையாளனாய் அன்னியூரில் விளங்கும் ஞானவடிவினனின் திருவடிகளைத் தொழுதலால் வினை மாசுகளிலிருந்து விடுபட்டவராவீர்.

5. பொ-ரை: மனநிறைவுடன் வாழ விரும்புகின்றவர்களே, அற வடிவினனாய் நான்கு வேதங்களிலும் பரம்பொருளாகக் கூறப்பட்டுள்ள அன்னியூர்ப் பெருமான் திருவடிகளுக்கு அன்பு செய்து அவனோடு உறவு கொள்வீர்களாக.

கு-ரை: நிறைவுவேண்டுவீர் - குறைவிலா நிறைவாக விரும்புகின்றவர்களே. அறவன் - அறவடிவானவன்.

6. பொ-ரை: உலக வாழ்க்கையில் இன்பங்களை எய்த விரும்பும் அடியவர்களே, அன்பனாக விளங்கும் அன்னியூர் இறைவனை நல்ல பொன்னே என்று கூறுமின், தேவர்களாகலாம்.

கு-ரை: உம்பராக - தேவர்களாக. நன்பொன் என்னுமின் - நல்ல பொன் என்று சொல்லுங்கள்.

7. பொ-ரை: அந்தணர்களின் தந்தையாக விளங்கும் அன்னியூர் இறைவனை எந்தையே என அழைக்க மலமாயைகள் நீங்கும்.

கு-ரை: பந்தம் - மலமாயையால் விளைந்த கட்டு.