பக்கம் எண் :

 98. திருச்சிராப்பள்ளி979


1065. மலைமல்குதோளன் வலிகெடவூன்றி

மலரோன்றன்

தலைகலனாகப் பலிதிரிந்துண்பர்

பழியோரார்

சொலவலவேதஞ் சொலவலகீதஞ்

சொல்லுங்கால்

சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர்

செய்கையே. 8

1066. அரப்பள்ளியானு மலருறைவானு

மறியாமைக்

கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங்

கல்சூழ்ந்த

சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர்

மனைதோறும்

இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டா

லிகழாரே. 9

___________________________________________________

8. பொ-ரை: மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணனின் வலிமை கெடுமாறு ஊன்றி அழித்துத் தாமரை மலர் மேல் உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண்கலனாகக் கொண்டு திரிந்து அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழி வருமே என்று நினையாதவராய், இசையோடு ஓதத் தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதுமிடத்துச் சில பிழைபட்டன என்றாலும் அவற்றையும் ஏற்று மகிழ்பவர் சிராப்பள்ளி மேவிய பெருமைக்குரிய சிவனார். இவர்தம் செய்கைகளின் உட்பொருள் யாதோ?

கு-ரை: தலையே கலனாகப் பலி ஏற்றுண்பார்; சொல்லவல்ல வேகத்தையும் பாடலையும் சொன்னால் சிராப்பள்ளியார் செய்கை சில அல்லாதன போலும் என்கின்றது. மல்கும் - நிறைந்த, வேதங்களையும் பாடல்களையும் சொன்னால் அவற்றில் சில அல்லாதன என்பதை அவர் செய்கைகளிலிருந்து அறிகிறோம் என்பது கருத்து.

9. பொ-ரை: பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் அறியாதவாறு அடிமுடி கரந்து.