பக்கம் எண் :

980திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1067. நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி

நாட்காலை

ஊணாப்பகலுண் டோதுவோர்க

ளுரைக்குஞ்சொல்

பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம்

பெருமானார்

சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று

சேர்மினே. 10

___________________________________________________

உயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக் கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும் மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக் கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?

கு-ரை: அயனும் மாலும் உம்மைக் காணாவிட்டாலும் நீர் மனைதொறும் பிச்சைக்குப் புறப்படாதீர்; உம்மை யாவரும் இகழார்கள் என்கிறது.

அரப்பள்ளியான் - பாம்பைப் படுக்கையாகக்கொண்ட திருமால். கரப்பு உள்ளி - இறைவன் மறைந்திருப்பதை எண்ணி. நாடி - தேடி, ஏதிலர் - அயலார்.

10. பொ-ரை: நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர் எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.

கு-ரை: புத்தரும் சமணரும் உரைக்கும் சொல்லைப் பேணாது பெருஞ்சிறப்பெய்த விரும்புபவர்களே! சிராப்பள்ளி சேர்மின் என்கின்றது.

நாணாது - வெட்கப்படாமல், கஞ்சியை விடியலுண வாகவும், பகலிலும் உண்டு ஓதுபவர்கள் புத்தர்கள். பேணாது. - போற்றாது உறுசீர் - மிக்கபுகழ். சேணார் கோயில் - ஆகாயாமளாவிய கோயில்.