பக்கம் எண் :

 99. திருக்குற்றாலம்981


1068. தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத்

திரைசூழ்ந்த

கானல்சங்கேறுங் கழுமலவூரிற்

கவுணியன்

ஞானசம்பந்த னலமிகுபாட

லிவைவல்லார்

வானசம்பந்தத் தவரொடுமன்னி

வாழ்வாரே. 11

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

11. பொ-ரை தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் இறைவனை, அலைகளிற் பொருந்திவந்த சங்குகள் சோலைகளில் ஏறி உலாவும் கடலை அடுத்துள்ள கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிப் போற்றிய, நன்மைகள்மிக்க்இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகிற் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்.

கு-ரை: சிராப்பள்ளியானைத் துதித்த ஞானசம்பந்தன் பாடலிவை வல்லார் தேவரொடு சேர்ந்து வாழ்வர் என்கின்றது. தேன் - வண்டு. கானல் - கடற்கரைச்சோலை. வானசம்பந்தத்தவர் - வானுலகிற் சம்பந்தமுடைய தேவர்கள்.

திருஞானசம்பந்தர் புராணம்

செம்மணி வாரி அருவிதூங்கும்

சிராப்பள்ளி மேய செழுஞ்சுடரைக்

கைம்மலை ஈருரி போர்வைசாத்துங்

கண்ணுத லாரைக் கழல்பணிந்து

மெய்ம்மகிழ் வெய்தி உளங்குளிர

விளங்கிய சொற்றமிழ் மாலைவேய்ந்து

மைம்மலர் கண்டர்தம் ஆனைக்காவை

வணங்கும் விருப்பொடு வந்தணைந்தார்.

- சேக்கிழார்.