2553.
|
கனைகொளிருமல்
சூலைநோய்
கம்பதாளி குன்மமும்
இனையபலவு மூப்பினோ
டெய்திவந்து நலியாமுன்
பனைகளுலவு பைம்பொழிற்
பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான்
வீரட்டானஞ் சேர்துமே. 4 |
2554.
|
உளங்கொள்போக
முய்த்திடா
ருடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாடொறுந்
துயரலாழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துலா
வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான்
வீரட்டானஞ் சேர்துமே. 5 |
கு-ரை:
நல்ல உள்ளத்தை உடையவரே உயிர்க்கு உறுதியாவதை
அறிதிர் என்னில் திருக்கோவலூர் வீரட்டானம் சேர்வோம். அள்ளற்சேறு-
நரகம்.
4.
பொ-ரை: மூப்புக் காலத்தில் கணைத்தலைக் கொண்ட இருமல்,
சூலை நோய், நடுக்கம், குன்மம் முதலியன வந்து நலிவு செய்தற்கு முன்னே,
பனைகள் மிக்க பசிய பொழில் வயல் ஆகியன சூழ்ந்த கோவலூரில்,
இருவினைகளும் அற்ற வடிவினனாய் விளங்கும் சிவபிரானது
வீரட்டானத்தை அடைவோமாக.
கு-ரை:
கம்பதாளி-தாள்நடுங்கும் ஒருவகை நோய்; கம்பம்-நடுக்கம்;
தாளி-கால்களைப்பற்றுவது. பெண்ணை என்றதற்கேற்ப பனந்தோப்பு
மிக்கிருக்கும் நாடு. இருவினையையும் போக்கிய சிவவேடத்தை உடையவன்.
5.
பொ-ரை: ஆழமான சிந்தனையை உடைய நெஞ்சமே! உடலற்ற
காலத்தில் மனத்தால் விரும்பியவற்றை எய்துதல் இயலாது. நாள்
|