2555.
|
கேடுமூப்புச்
சாக்காடு
கெழுமிவந்து நாடொறும்
ஆடுபோல நரைகளா
யாக்கைபோக்க தன்றியும்
கூடிநின்று பைம்பொழிற்
குழகன்கோவ லூர்தனுள்
வீடுகாட்டு நெறியினான்
வீரட்டானஞ் சேர்துமே. 6 |
2556.
|
உரையும்பாட்டுந்
தளர்வெய்தி
யுடம்புமூத்த போதின்கண்
நரையுந்திரையுங் கண்டெள்கி
நகுவர் நமர்க ளாதலால் |
தோறும் துளங்கித்
துயருறாதே. வளமான பெண்ணையாறு வந்து பாயும்
வயல்கள் சூழ்ந்த கோவலூரில், விளங்கிய கோவணத்தினனாய்ச் சிவபிரான்
வீற்றிருந்தருளும் வீரட்டானத்தை அடைவோம்.
கு-ரை:
ஆழி நெஞ்சமே!-ஆழ்தலையுடைய மனமே! மனத்தில்
விரும்பப்பட்ட போகங்களை அநுபவிக்கச் செய்யும் புண்ணியம்
இல்லாதவர்கள் கட்டையை விட்டகன்ற சமயத்தில், தளர்ந்து நின்று
நாள்தோறும் துயரம் அடையாதே.
6.
பொ-ரை: நம் உடல் நரையுடையதாய், ஆடுபோல அலைதலால்
கேடு, முதுமை, சாக்காடு ஆகியன நெருங்கி வந்து அழிதலை உடையது.
பசுமையான பொழில்கள் செறிந்து நின்று அணி செய்யும் கோவலூரில்
விளங்கும் குழகனும், வீடுகாட்டும் நெறியினனும் ஆகிய சிவபிரானது
வீரட்டானத்தை அடைவோம். நெஞ்சே! வருக.
கு-ரை:
கேடும் முதுமையும் இறப்பும் பொருந்திவந்து நாள்தொறும்
ஆடுகளைப்போல நரைகளாகி உடம்பு அழிதலுடையது. பேரின்ப
வீட்டைக்காட்டும் திருநெறி. நெறியினான்-திருநெறியில் சென்று
அடையப்பெறும் சிவபிரான்.
7.
பொ-ரை: பேச்சும், பாட்டும் தளர்ந்து நம் உடல் மூத்த
போதில் நம் உறவினர் நரைதிரை கண்டு இகழ்ந்து சிரிப்பர். ஆதலால்,
மலையிலிருந்து இழிந்து வரும் பெண்ணையாறு பாய்ந்துலாவும் வயல்கள்
|