|
வரைகொள்பெண்ணை
வந்துலா
வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர்வெண் ணீற்றினான்
வீரட்டானஞ் சேர்துமே. 7 |
2557.
|
ஏதமிக்க
மூப்பினோ
டிருமலீளை யென்றிவை
ஊதலாக்கை யோம்புவீ
ருறுதியாவ தறிதிரேல்
போதில்வண்டு பண்செயும்
பூந்தண்கோவலூர்தனுள்
வேதமோது நெறியினான்
வீரட்டானஞ் சேர்துமே. 8 |
2558.
|
ஆறுபட்ட
புன்சடை
அழகனாயி ழைக்கொரு
கூறுபட்ட மேனியான்
குழகன்கோவ லூர்தனுள் |
சூழ்ந்த கோவலூரில்
மணம் கமழும் சிறப்புமிக்க வெண்ணீறணிந்தவனாய்
விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தைச் சென்றடைவோம்.
கு-ரை:
உரையும் பாட்டும்-பேச்சும் பாடலும் பாட்டும் உரையும்
பயிலாதன இரண்டோட்டைச் செவியும் உள.
8.
பொ-ரை: துன்பம்மிக்க மூப்போடு இருமல் ஈளை ஆகியவற்றுக்கு
இடனாய பருத்த உடலைப் பேணித் திரிபவர்களே! உயிர்க்கு உறுதியாவதை
அறிவீராயின், மலர்களில் வண்டுகள் பண் பாடும் அழகிய கோவலூரில்,
வேதங்களை ஓதும் நெறியினன் ஆகிய சிவபிரானது வீரட்டானத்தை
அடைவோம். வருக.
கு-ரை:
ஈளை-சிலேட்டும தோடத்தால் வரும் நோய் வகையுள்
ஒன்று. ஊதல் ஆக்கை-பருத்தலையுடைய உடம்பு. உறுதி-ஆன்ம லாபம்.
அறிதிர் ஏல்-அறிவீர் எனில். வேதம் ஓதும் நெறியினான்-வேதநெறியை
அருளியவன்.
9.
பொ-ரை: கங்கை தங்கிய மென்மையான சடைகளை உடைய
அழகனும், உமையம்மைக்குத் தன் மேனியில் ஒரு கூற்றை
|