பக்கம் எண் :

1017

  நீறுபட்ட கோலத்தான்
     நீலகண்ட னிருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான்
     வீரட்டானஞ் சேர்துமே.            9
2559.







குறிகொளாழி நெஞ்சமே
     கூறைதுவரிட் டார்களும்
அறிவிலாத வமணர்சொல்
     லவத்தமாவ தறிதிரேல்
பொறிகொள்வண்டு பண்செயும்
     பூந்தண்கோவ லூர்தனுள்
வெறிகொள்கங்கை தாங்கினான்
     வீரட்டானஞ் சேர்துமே.           10


அளித்தவனும் ஆகிய குழகன் விளங்கும் கோவலூரில் நீறணிந்த
கோலத்தினனாய், நீலகண்டனாய், திருமால் பிரமர்க்கு வேறான
சிந்தையனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தை அடைவோம்
வருக.

     கு-ரை: ஆயிழை-உமாதேவியார். திருவெண்ணீறு சண்ணித்த
மேனியழகினன்.

     இருவர்-மாலும் அயனும், வேறுபட்ட சிந்தைக்கு ஏதுவாயிருந்தவன்.
‘அந்தணர் தம் சிந்தையானை’ ‘வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற
கருத்தானை’.

     10. பொ-ரை: ஆழமாகப்பலவற்றை எண்ணும் நெஞ்சமே!
துவரூட்டிய ஆடையினர்களாகிய புத்தர்களும் அறிவிலாத சமணர்களும்
கூறும் சொற்கள் பயனற்றவை ஆதலை உணர்வாயேயானால், பொறிகளை
உடைய வண்டுகள் இசைபாடும் அழகிய கோவலூரில் மணம் கமழும்
கங்கையை அணிந்த சடையினனாகிய சிவபிரானது வீரட்டானத்தை
அடைவோம் வருக.

     கு-ரை: ‘ஆழி நெஞ்சமே’ நீராழங்கண்டாலும் நெஞ்சாழம்
காணமுடியாது. அவத்தம்-பொய், பொறி-வரி. வெறி-மணம்.