2560.
|
கழியொடுலவு
கானல்சூழ்
காழிஞான சம்பந்தன்
பழிகள்தீரச் சொன்னசொற்
பாவநாச மாதலால்
அழிவிலீர்கொண் டேத்துமின்
அந்தண்கோவ லூர்தனுள்
விழிகொள்பூதப் படையினான்
வீரட்டானஞ் சேர்துமே. 11
|
திருச்சிற்றம்பலம்
11. பொ-ரை: வீணே அழிதல் இல்லாதவர்களே!
உப்பங்கழிகளோடு
கூடிய கடற்கரைச் சோலைகள் சூழ்ந்த காழிப் பதியில் தோன்றிய
ஞானசம்பந்தன், பழிகள் நீங்கப்பாடிய இப்பதிகச் செஞ்சொல், பாவங்களை
நீக்கும் தன்மையன ஆதலின் இவற்றை ஓதி வழிபடுங்கள். அழகிய
தண்ணிய கோவலூரில் பெரிய விழிகளைக் கொண்ட பூதப்படைகளை
உடைய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். வருக.
கு-ரை: பழிகள் தீரச்சொன்ன சொல்.
பாவநாசம்-பழிகள் ஒழியப்
பாடியருளிய இத்திருப்பதிகத்தினை ஓதுவார்க்குப் பாவங்கள் அழியும்
கொண்டு-இத்திருப்பதிகப் பொருளை உள்ளத்திற் கொண்டு.
திருஞானசம்பந்தர்
புராணம்
கோவல்
நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரைகழல்
பணிந்தேத்தி
ஆவின் ஐந்துகந் தாடுவார் அறையணி நல்லூரை
அணைந்தேத்திப்
பாவ லர்ந்தசெந் தமிழ்கொடு பரவுவார்
பரவுசீர் அடியார்கள்
மேவும் அன்புறு மேன்மையாந் தன்மையை விளங்கிட
அருள்செய்தார்.
-சேக்கிழார்.
|
|