2562.
|
விண்டவெள்
ளெருக்கலர்ந்த
வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை
முடிச்சிவ னிருந்தவூர்
கெண்டைகொண் டலர்ந்தகண்ணி
னார்கள்கீத வோசைபோய்
அண்டரண்ட மூடறுக்கு
மந்தணாரு ரென்பதே. 2 |
2563.
|
கறுத்தநஞ்ச
முண்டிருண்ட
கண்டர்கால னின்னுயிர்
மறுத்தமாணி தன்றனாகம்
வண்மைசெய்த மைந்தனூர்
வெறித்துமேதி யோடிமூசு
வள்ளைவெள்ளை நீள்கொடி
அறுத்துமண்டி யாவிபாயு
மந்தணாரு ரென்பதே. 3 |
2.
பொ-ரை: மலர்ந்த வெள்ளெருக்குமலர், விரிந்தவன்னியிலை,
கொன்றைமலர், ஊமத்தம் மலர் ஆகிய இவற்றால் இயன்ற இண்டை
மாலையைச் சூடிய செஞ்சடை முடியினை உடைய சிவனது ஊர்,
கெண்டைமீன் போன்ற விரிந்த கண்களை உடைய மகளிர் பாடும் கீத
ஒலி மேலுலகைச் சென்றளாவும் திருவாரூர்.
கு-ரை:
இண்டை-திங்கள் வட்டம்போலத் திரட்சியுற்ற பத்திரபுட்பங்
கலந்த மாலைவகை. சிவலிங்கத்திற்கு இண்டை இன்றியமையாதது.
அண்டம்-மேலுலகம்.
3.
பொ-ரை: கொடிய ஆலகால விடத்தை உண்டு இருண்ட
கண்டத்தை உடையவரும், காலன் உயிரைக் கவரவந்த போது
மார்க்கண்டேயரைக் காத்து அவரது உடல் என்றும் இளமையோடு
திகழும் பேற்றை வழங்கியவருமான இளமையும் வலிமையும் உடைய
சிவன் ஊர், எருமைகள் மயங்கியோடி வெள்ளியவள்ளைக் கொடிகளை
அறுத்துக் குளங்களில் பாயும் குளிர்ந்த திருவாரூர்.
|