2564.
|
அஞ்சுமொன்றி
யாறுவீசி
நீறுபூசி மேனியில்
குஞ்சியார வந்திசெய்ய
வஞ்சலென்னி மன்னுமூர்
பஞ்சியாரு மெல்லடிப்
பணைத்தகொங்கை நுண்ணிடை
அஞ்சொலார் அரங்கெடுக்கு
மந்தணாரூ ரென்பதே. 4 |
கு-ரை:
பாலாகித்தோன்றிப் பருகினாராவிகொள்ளும் ஆலாலம்
கந்தபுராணம்-வள்ளியம்மையார். மாணி-பிரமசாரி; மார்க்கண்டேய முனிவர்,
வண்மை-கொடைமை, வன்மை என்றும் பாடம் இருத்தல் கூடும்.
வெறித்து-மயங்கி,
கலங்கி வள்ளை என்பது ஒரு கொடி, ஆவி-குளம்.
4.
பொ-ரை: காமம், குரோதம் முதலிய அறுபகைகளை விடுத்து,
ஐம்புலன்களும் ஒன்றிநிற்கத் தலையாரக் கும்பிட்டு வழிபடும்
அடியவர்களுக்கு அஞ்சாதீர் என்று அபயமளிக்கும் சிவன் மன்னிய ஊர்,
பஞ்சுபோன்ற மென்மையான அடிகளையும், பருத்த தனங்களையும்,
நுண்ணியடையையும், அழகிய இனிய சொற்களையும் உடைய மகளிர்
அரங்கில் ஏறிநடஞ்செயும் ஆரூர்.
கு-ரை:
அஞ்சும் ஒன்றுதல்-ஐம்பொறிகளும் தத்தம் புலன்களைக்
கொள்வதில் சிவபெருமான் திறத்திலன்றி மற்றெத்திறத்திலும் ஈடுபடாமை.
ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள ஆறு வீசுதல்-காமக் குரோத லோப
மோக மத மாற்சரியம், அறு பகையும் செற்று ஐம்புலனும் அடக்கி நிற்றல்.
குஞ்சி-தலைமயிர்,
ஈண்டுத்தலைக்கு ஆகுபெயர்; குஞ்சி ஆர-
தலையார. வந்தி-வந்தனை. தலையாரக் கும்பிட்டு. அஞ்சல் என்னி-
அஞ்சாதே என்னும் சிவபிரான். பஞ்சியாருமெல்லடி-பஞ்சுலாவிய மெல்லடி.
(தி.2 ப.105 பா.9). அடியின் மென்மைக்குப் பஞ்சு ஒப்பு. மகளிர் அரங்கில்
ஏறி நடஞ்செய்யும் திறம் அவையேரால் எடுத்துப் புகழ்ந்து பாராட்டும்
அளவுடையதாகும்.
|