2567.
|
கங்கைபொங்கு
செஞ்சடைக்
கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த
மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை
கொத்திறுத்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறு
மந்தணாரூ ரென்பதே. 7 |
2568.
|
வரைத்தலம்
மெடுத்தவன்
முடித்தலம் முரத்தொடும்
நெரித்தவன் புரத்தைமுன்
னெரித்தவன் னிருந்தவூர் |
கு-ரை:
கள்ளநெஞ்ச வஞ்சகக்கருத்து-நெஞ்சத்தின் இயல்பும்
அதுகாரணமாகத் தோன்றும் வஞ்சகமாகிய காரியமும், அக்காரியத்தின்
விளைவான தீயகருத்தும் உணர்த்தப்பட்டன. அத்தீயகருத்து உள்ளவரை
ஆருள்பெறலரிது. அக்கருத்தை ஒழித்து, அன்போடு, உள்ளம்
ஒன்றியிருந்து, தியாநம் புரிபவர் உள்ளத்தில் உள்ள சிவபெருமான்.
வாளைகள் துள்ளிப்பாய்கின்ற வயல் வயலில் நாரை ஆரும் ஆரூர்.
நெய்தற் பூக்களைச் சூழ்ந்து வண்டுகள் உலாவும் அள்ளல்-சேறு.
நெய்தற்கண் உள்ள ஆரல் மீன்கள்.
7.
பொ-ரை: பொங்கி வந்த கங்கையைச் சடையிற் கரந்த
சருவவியாபகரும், காமன் பொடிபட அனற்கண்ணைத் திறந்த வரும்,
மங்கைபங்கரும் ஆகிய சிவன் மன்னிய ஊர், அழகிய கண்களை உடைய
மந்திகள் தென்னை மரத்தின் வழியே ஏறி வாழைக்குலைகளை ஒடித்து
மாமரத்தின் மேல் ஏறும் சோலை வளம் சான்றதிருவாரூர்.
கு-ரை:
கங்கைநீர் பொங்குஞ் செஞ்சடை, கங்கையைக்கரந்த
அகண்டர். அகண்டர்-சருவவியாபகர். மந்தி-பெண்குரங்குகள்-
தெங்கினூடுபோய், வாழைக்குலையை ஒடித்து, மாமரத்தின் மேல் ஏறும்
வளமுடைய.
8.
பொ-ரை: திருக்கயிலைமலையை எடுத்த இராவணனுடைய
தலைகளையும் மார்பினையும் நெரித்தவனும், திரிபுரங்களை எரித்தவனும்
ஆகிய, சிவபிரான் ஊர், வரிசையாயமைந்த
|