பக்கம் எண் :

1024

நிரைத்தமாளி கைத்திருவி
     னேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்க
     ளாடுமாரூ ரென்பதே.             8

2569.






இருந்தவன் கிடந்தவன்
     னிடந்துவிண் பறந்துமெய்
வருந்தியு மளப்பொணாத
     வானவன் மகிழ்ந்தவூர்
செருந்திஞாழல் புன்னைவன்னி
     செண்பகஞ் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறு
     மந்தணாரூ ரென்பதே.            9
2570.



பறித்தவெண் டலைக்கடுப்
     படுத்தமேனி யார்தவம்
வெறித்தவேடன் வேலைநஞ்ச
     முண்டகண்டன் மேவுமூர்


மாளிகைகளில் திருமகளை ஒத்த அழகும், வெண்ணகையும்
செவ்வாயுமுடைய மகளிர் நடனமாடி மகிழும் ஆரூர்.

     கு-ரை: உரத்தொடும்-மார்பொடும், வலியுடன், நிரைத்த-வரிசையுற்ற.
திருவின் நேரனார்கள்-திருமகளை நேரொத்தவர்கள். அரத்தவாய்-செவ்வாய்.

     9. பொ-ரை: தாமரைமலரில் இருந்த நான்முகனும், பாம்பணையில்
கிடந்த திருமாலும் விண்பறந்தும் மண்ணிடந்து வருந்தியும்
அளந்துகாணமுடியாத முடியையும் அடியையும் உடைய பெருமான் விரும்பி
எழுந்தருளியிருக்கும் ஊர், செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம்,
குரா ஆகியன மலர்ந்து மணம்வீசும் சோலைகள் உடைய திருவாரூர்.

     கு-ரை: நான்முகன் திருமால் இடந்தும் பறந்தும் வருந்தியும்
அளப்பதற்கு ஒன்றாத உம்பரான். செருந்தி-ஒருவகைமரம்.

     10. பொ-ரை: பறித்த வெள்ளிய தலையையும், கடுக்காய்ப்
பொடிபூசிய மேனியையும், உடைய சமணர், மெய்யில்லாத தவம்