பக்கம் எண் :

1025

மறித்துமண்டு வண்டல்வாரி
     மிண்டுநீர் வயற்செந்நெல்
அறுத்தவா யசும்புபாயு
      மந்தணாரூ ரென்பதே.           10

2571.







வல்லிசோலை சூதநீடு
     மன்னுவீதி பொன்னுலா
அல்லிமா தமர்ந்திருந்த
     வந்தணாரூ ராதியை
நல்லசொல்லு ஞானசம்
     பந்தன்நாவின் இன்னுரை
வல்லதொண்டர் வானமாள
     வல்லர்வாய்மை யாகவே.           11


                     திருச்சிற்றம்பலம்


மேற்கொண்டு கண்டு அஞ்சும் வேடமுடையவனும், நஞ்சுண்ட கண்டனும்
ஆகிய சிவபெருமான் மேவும் ஊர், மீண்டும், மீண்டும் தோன்றும்
வண்டலை வாரி நீரைத்தடுத்து, செந்நெல்லை அறுத்த வயல்களில் ஊற்று
வழியே நீர்ப்பொசிவு தோன்றும், மண்வளமும், நீர்வளமும் உடைய
திருவாரூர்.

     கு-ரை: பறிகொள்தலையினாக கடுப்படுத்த மேனி,
கடுப்பொடியுடற்கவசர். ‘கடுவேதின்று’ மெய்ப்பொடியட்டி வெறித்த
வேடன்-அஞ்சிய சிவவேடமுடைய சிவபிரான். அச்சம்-நெறியல்லா நெறியிற்
செல்வதுபற்றித் தோன்றுவது. மறித்து-தடுத்து திருப்பி அசும்பு-நீர்ப்பொசிவு.

     11. பொ-ரை: கொடிகள் அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்று
மாமரங்களைக் கொண்டு விளங்கும் திருவீதிகளை உடைய அழகு
பொருந்திய அல்லியங்கோதையம்மையோடு எழுந்தருளி விளங்கும் ஆரூர்
இறைவனை ஞானநெறிகளை உணர்த்தும் சொற்களைக்கூறும் ஞானசம்பந்தன்
நாவினால் பாடிப் போற்றிய இன்னுரைகளை ஓதும் தொண்டர்கள் வானம்
ஆள்வர்; இஃது உண்மை.

     கு-ரை: சூதம்-மாமரம். பொன்னுலாவல்லிமாது-‘அல்லியங்கோதை’
தேவியின் திருநாமம். நல்ல-ஞான நன்னெறியுணர்த்துஞ்