பக்கம் எண் :

1026

சொற்களை இன்னுரை-பேரின்பப்பாடல வானம்-தேன்வந்த முதின்றெளிவி
னொளிவந்தவான்’ திருவாசகம். 178வானுக்குள் ஈசனைத் தேடும் மதி இலீர்’
திருமந்திரமாலை. முத்தி நிச்சயம். பக்கம். 139. வாய்மை-வாயின் (நாவின்)
பொய்யாமொழி. ‘வாய்மை எனப்படுவது யாதெனின்’ என்று ஒரு வினாவை
ஏறிட்டுக்கொண்டு, அதற்கு விடையிறுக்கும் ஆசிரியர், ‘யாதொன்றும் தீமை
இலாத (வற்றைச்) சொலல்’ என்றார். செயல் என்றோ எண்ணல் என்றோ
உரைத்தாரல்லர், அதனால், வாய்மை சொற்களைப் பற்றியதாதல் விளங்கும்.
உள்-உள்ளம். உள்ளத்தின்தன்மை உண்மை, உள்ளுதலின் பொய்யாமை
குறித்து. ‘உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள்
எல்லாம் உளன்’. மெய்ம்மை-மெய்யாற் செய்யுஞ் செயலின் பொய்யாமை
உண்மையும் முறையே எண்ணம் செய்கை இரண்டனையும் பற்றிய காரணப்
பெயர்களாம்.

       திருஞானசம்பந்தர் புராணம்

புவனவா ரூரினிற் புறம்புபோந் ததனையே
     நோக்கி நின்றே
அவமிலா நெஞ்சமே அஞ்சல்நீ உய்யுமா
     றறிதி அன்றே
சிவனதா ரூர்தொழாய் நீமற வாதென்று
     செங்கை கூப்பிப்
பவனமாய்ச் சோடையாய் எனுந்திருப்
     பதிகமுன் பாடினாரே.

                                -சேக்கிழார்.

         திருவாரூர்ப் புராணம்

புதியசுவை யாரமுதம் பொழிந்த ஞானப்
     பொங்குபசுந் தமிழ்ப்பனுவல் புரைதீர் தெய்வக்
கதிரொளியெண் திசைபரப்பிக் கரையி லாத
     காரமணெட் டிருளொதுக்கிக் கறைதீர் முத்திப்
பதிபுகுது நெறிதெரித்துப் பழைய சைவப்
     பைம்பொன்மணி மகுடமெழில் படைப்பத் தோன்றும்
மதியகடு தொடுகுடுமி மதில்சூழ் காழி
     வைதிகசூ ளாமணியை மனத்துள் வைப்பாம்.

                                -சம்பந்த முனிவர்.