பக்கம் எண் :

1027

102. திருச்சிரபுரம்

பதிக வரலாறு:

     சீகாழிக்குரிய பதிகங்களுள் ஒன்று. பாடப்பட்ட காலம், இடம்
முதலியன குறிக்கப்பட்டில,

                      பண்: நட்டராகம்

ப.தொ.எண்: 238   பதிக எண்: 102

                      திருச்சிற்றம்பலம்

2572.







அன்ன மென்னடை யரிவையோ டினிதுறை
     யமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர்
     வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்
     சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமல ரடிதொழு மடியவர்
     வினையொடும் பொருந்தாரே.        1


     1. பொ-ரை: அன்னம் போன்ற மெல்லிய நடையினை உடைய
உமையம்மையோடு இனிதாக உறையும் அமரர் தலைவரும், ஒளி விடும்
செஞ்சடையில் வெள்ளெருக்கமலர் சூடியவரும். வேதங்களின் முடிபாய்
விளங்கும் உபநிடதங்கள் வழியே நன் பொருள்களை அருளியவரும்
பெரியமதில்களால் சூழப்பட்ட சிரபுரத்தில் எழுந்தருளியிருப்பவரும்
ஆகிய புகழாளர்தம் அழகிய மலர் போன்ற திருவடிகளைத் தொழுது
எழும் அடியவர் வினையொடும் பொருந்தார்.

     கு-ரை: அன்னப்பறவையின் நடைபோல மெல்லிய நடையுடைய
உமாதேவியார். அடியவர் வினையொடும் பொருந்தார்.

     இத்திருப்பதிக முழுதும் பாராயணம் புரிவாரது வினைதீர்க்கும்
உண்மையை அனு வித்துணர்க.