பக்கம் எண் :

1029

2575.







மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக்
     காலனை யுதைசெய்தார்
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப்
     பிணக்கறுத் தருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச்
     சிரபுரத் தமர்கின்ற
ஆணிப் பொன்னினை யடிதொழு மடியவர்க்
     கருவினை யடையாவே.             4
2576.



பாரு நீரொடு பல்கதி ரிரவியும்
     பனிமதி யாகாசம்
ஓரும் வாயுவு மொண்கனல் வேள்வியிற்
     றலைவனு மாய்நின்றார்


     கு-ரை: மானம்-பெருமை, வலி. பார்த்தன் அர்ச்சுனன. புருதையின்
புதல்வன் என்னும் பொருளது. மதித்து-அறிந்து. கானத்தே திரிவேடன்-
வனசரன். அமர்-விரும்பிச் செய்யும் போர். பகைத்துச் செய்யும் போரன்று.
களிப்புமிகுதி குறிக்கின்ழி, ‘அமர்க்களம்’ என்பது உலகவழக்கு.

     4. பொ-ரை: மார்க்கண்டேயர் உயிரை மதித்துத் தானே கவர வந்த
தென்திசைக்கோனாகிய காலனை உதைத்தவரும், தம்மை விரும்பி நினையும்
மெய்யடியார் படும் பெருந்துயர்ப்பிணக்கை நீக்கி அருள் புரிபவரும்,
சடையில் வெண்பிறை அணிந்தவரும் ஆகிய விரிந்த புகழை உடைய
சிரபுரத்தில் அமர்கின்ற மாற்றுயர்ந்த ஆணிப்பொன் போன்றவரை
அடிதொழும் அடியவர்களை அருவினைகள் அடையா.

     கு-ரை: முனிவர் உயிரை அறிந்து கொள்ளவந்த அக்கூற்றுவனை
‘பெறுமவற்றுள் யாமறிவதில்லை’ (குறள்) என்பதில் பரிமேலழகர் மதிப்பது
என்றுரைத்தார். உண்மை அடியவர்க்குத் திருவடிவேட்கையும், சதாகால
தியானமும் இன்றியமையாதவை. துயர்ப்பிணக்கு-துயரத்தைத் தரும்மாறுபாடு.

     5. பொ-ரை: மண், நீர், பல கதிர்களை உடைய இரவி, தண்மதி,
ஆகாயம், வாயு, ஒளிபொருந்திய கனல் வேள்வித்தலைவனாகிய